( (கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு புகையிரத வீதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று புதன்கிழமை (10) பகல் 12.30 மணியளவில் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


புகையிரத வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று, திடீரென வீதியில் திரும்ப முற்பட்ட போது வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்தையடுத்து  மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த வவுணதீவு கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் கால் முறிந்தது டன் அவருடன் பிரயாணித்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸ் நிலைய  போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours