(ரஞ்சன்)
போரதீவுப்பற்று பிரதேச சபையின் 14வது அமர்வு - சபை உறுப்பினர் இடைநீக்கம், 1990 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் குடிநீர் பிரச்சனை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 14வது சபை அமர்வு நேற்று (22.07.2026) ஆம் திகதி காலை, சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் சபா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உபதவிசாளர் தங்கராசா கயசீலன், பிரதேச சபையின் செயலாளர் சண்முகராஜா விஜிதராஜா, சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் துறைசார் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்அமர்வில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் மற்றும் விவாதிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு...
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் 1 மாதத்திற்கு இடைநீக்கம்.
போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயல்பாடுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை விமர்சித்துத் தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் (Facebook) பதிவிட்டு வந்தமையைக் கண்டித்து, தேசிய மக்கள் சக்தியின் சபை உறுப்பினரான மகாலிங்கம் மனோதினி அவர்களை ஒரு மாத காலத்திற்குச் சபை அமர்வுகள் மற்றும் நடவடிக்கைகளில் பங்கேற்காதவாறு இடைநீக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
1987ஆம் ஆண்டு பிரதேச சபை விதிகளுக்கு அமைவாகவும், சபையின் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு நடவடிக்கையாகவும் பிரதேச சபையின் தவிசாளரால் முன்மொழியப்பட்ட இத்தீர்மானத்திற்குப் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1990 அவசர ஆம்புலன்ஸ் சேவை வேண்டி அவசரத் தீர்மானம் நிறைவேற்றம்
போரதீவுப்பற்று பிரதேசம் தொடர்ச்சியாகக் காட்டுயானைத் தாக்குதல்கள், விஷப்பாம்புக் கடிகள் மற்றும் வீதி விபத்துக்கள் அதிகமாக இடம்பெறும் அபாயகரமான பிரதேசமாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய உபதவிசாளர் தங்கராசா கயசீலன், மக்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்காக 1990 சுவசெரிய அவசர ஆம்புலன்ஸ் (Ambulance) சேவை இப்பிரதேசத்திற்கு உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்காக உபதவிசாளரினால் சபையில் கொண்டுவரப்பட்ட சிறப்புத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நிதி நிறுத்தம் குறித்து உபதவிசாளர் சுட்டிக்காட்டு....
பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்துப் பேசிய உபதவிசாளர், "மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பைக் கொண்ட போரதீவுப்பற்று பிரதேசம், வறட்சியான காலங்களிலும் மழைக்காலங்களிலும் கிணற்று நீர் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லாத அளவுக்குப் பாதிக்கப்படும் பகுதியாகும்.
கடந்த காலங்களில் வறட்சி நிலவும் போது பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்க பிரதேச செயலகம் ஊடாக மத்திய அரசு நிதி வழங்கி வந்தது.
ஆனால், தற்போதைய அரசாங்கம் அந்நிதியை நிறுத்தியுள்ளது.
வருமானம் குறைந்த சபையான போரதீவுப்பற்று பிரதேச சபை, அதிக அளவிலான குடிநீர் தேவைகளைத் தடையின்றி வழங்கி வருகின்ற போதிலும், கடந்த வருடத்திற்கான நிலுவைத்தொகையும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.
எனவே, சபையில் உள்ள ஆளுமக்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை உடனடியாகத் தங்களது அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுசென்று தீர்வு காண வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
அபிவிருத்திப் பணிகள் மற்றும் சீரமைப்பு...
PSDG திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளில் 80%க்கும் அதிகமான வேலைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.
சபை நிதியைப் பயன்படுத்தி சில வட்டாரங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய வட்டாரங்களிலும் வரும் காலங்களில் பணிகளை விரைவாகத் தொடங்குவதற்குக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
'டிட்வா' (Ditwah) புயல் பாதிப்புகள்.
புயல் காரணமாக சேதமடைந்த கல்வெட்டுகள் மற்றும் வீதிகளை அடையாளம் கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சு கோரியுள்ளது.
இது தொடர்பான விபரங்களை விரைவாகச் சபை அலுவலகத்திற்கோ அல்லது வாட்ஸ்அப் குழு மூலமாகவோ வழங்கி ஒத்துழைக்குமாறு உறுப்பினர்களுக்குத் தவிசாளரால் வேண்டுகோள் விடுக்கப்
.jpeg)




.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours