( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை  நாளை (24) வெள்ளிக்கிழமை மூடப்படவிருக்கிறது.

இன்றும் 143 பேர் பயணித்துள்ளனர். நாளை காலை 100 பேரளவில் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பிற்பகல் 3 மணியுடன் பாதை பூட்டப்படும்.

 இந்த வருட பாதயாத்திரைக்கான காட்டுப் பாதை கடந்த 10 ஆம் திகதி திறக்கப்பட்டது. 15 தினங்களின் பின் இன்று வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை இதுவரை இப்பாதையால் சுமார் 40ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பயணித்துள்ளதாக  உகந்தமலை முருகன் ஆலய வண்ணக்கர் சுதா தெரிவித்தார்.
பாதயாத்திரையின்போது இதுவரை மாரடைப்பால் நான்குபேர் மரணித்துள்ளனர்.

 
அதேவேளை உகந்தமலை முருகனாலய வருடாந்த உற்சவம் கடந்த 15ஆம் திகதி  ஆரம்பமானது.பாலஸ்தாபனம் செய்த காரணத்தினால் திருவிழா இல்லை. சாதாரண இரவு பூஜை மாத்திரமே நடைபெற்றுவருகிறது.எதிர்வரும் 30 ஆம் திகதி நிறைவடையும்.

வரலாற்றில் கானகப் பாதை திறந்த( 10) முதல் நாளில் சுமார் 16000 பாதயாத்திரீகர்கள் பயணித்தமை இதுவே முதல் முறையாகும்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours