மட்டக்களப்பு திருப்பழுகாமம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீப்பள்ளயத் சடங்கு திருவிழா இன்று 24.07.2026 (வெள்ளிக்கிழமை) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
திருவிழா நாட்களில் தினமும் விசேட பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார வழிபாடுகள், பக்தி நிகழ்வுகள் மற்றும் சமய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறவுள்ளன.
திருவிழாவின் நிகழ்வான தீ மிதிப்பு வைபவம் எதிர்வரும் 31.07.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு பக்தர்களின் பெருந்திரளான பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
இறுதிநாளான 01.08.2026 அன்று விசேட பூஜைகளுடன் திருவிழா நிறைவுபெறும்.
ஆலய நிர்வாகத்தினர் இத்திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு அன்னையின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours