மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த டாக்டர் கலாரஞ்சனி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, அப்பதவிக்கான இடைக்கால ஏற்பாடாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்கள் இன்று (01) முதல் பதில் பணிப்பாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிழக்கு மாகாணத்தின் முக்கிய நிலை சிகிச்சை நிலையங்களில் ஒன்றாக விளங்குவதுடன், தினசரி பல் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது.
இதன் நிர்வாகப் பொறுப்பை இடைக்கால அடிப்படையில் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்கள் மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, குறித்த வெற்றிடத்திற்கு சுகாதார அமைச்சினால் விரைவில் நிரந்தர பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பதில் பணிப்பாளராக
பொறுப்பேற்றுள்ள வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்களுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.



Post A Comment:
0 comments so far,add yours