கொக்கட்டிச்சோலை
பொலிஸ் பிரிவில் உள்ள முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்டிருந்த
கைக்குண்டு (02) மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை
பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த மயானத்திற்கு சம்பவ தினமான
சென்றிருந்த நபர் ஒருவர் அங்கு கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு
பொலிசாருக்கு அறிவித்துள்ளதையடுத்து அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளை
மேற்கொண்டு குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்தனர்.
இதனை
தொடர்ந்து குறித்த கைக்குண்டை செயலிழக்க நீதிமன்ற அனுமதியை பெற்று வெள்ளிக்கிழமை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக
பொலிசார் தெரிவித்தனர்.

Post A Comment:
0 comments so far,add yours