மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளராக திரு. சண்முகராஜா விஜிதராஜா அவர்கள் இன்று (03.07.2026) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவரது பதவி உயர்வு மற்றும் கடமையேற்பை முன்னிட்டு, இன்று(03.07.2026) காலை போரதீவுப்பற்று பிரதேச சபை வளாகத்தில் விசேட வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் முன்னிலையில்,  தினவரவு டாப்பில் கையொப்பம் இட்டு  தனது கடமையினை பொறுப்பேற்றார்.

இவ்விழாவில் பிரதேச சபையின் முன்னாள் பதில்  செயலாளர் எஸ்.பகீரதன், சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

புதிய செயலாளருக்குப் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவர் தனது புதிய பதவியில் திறம்படச் செயலாற்ற சபையின் தவிசாளர் மற்றும் உத்தியோகஸ்தர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.


(ரஞ்சன்)




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours