(அஸ்லம் எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் கடந்த புதன்கிழமை அங்கு கள விஜயம் மேற்கொண்டு, பூங்காவின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்ந்த நிலையில், மக்கள் நலன் கருதி தேவையானளவு பிரகாசமான மின் விளக்குகளை உடனடியாக பொருத்துமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதையடுத்து கல்முனை மாநகர சபையின் தெரு விளக்கு பராமரிப்பு பிரிவினரால் மின்னொளி கட்டமைப்புகள் யாவும் துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு, புதிய பிரகாசமான கோப்ரா மின் விளக்குகள் பொருத்தப்பட்டதுடன் செயற்பாடின்றி காணப்பட்ட Park Light தொகுதிகளும் சீர்செய்யப்பட்டுள்ளன. மேலும் ஓய்வறை கூடாரங்கள் மற்றும் மலசலகூட தொகுதிகளிலும் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.


.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours