கல்முனை மாநகர சபையின் சேவை மேம்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட 02 புதிய ட்ரெக்டர்கள், திண்மக்கழிவகற்றல் சேவைக்காக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களினால் சுகாதாரப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு, இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் அஹ்சன் மனாஸிர், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் எம்.ஏ. டிலிப் நௌஷாட் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours