பூர்வீக காலத்தில் கதிர்காம பாதயாத்திரை என்பது வெறும் வழிபாடல்ல, அது ஒரு ஆன்மீக தவமாகும்.

கதிர்காமத்து முருகப்பெருமானை தரிசிக்கும் புனிதப்பயனமான பாதயாத்திரை எந்த ஆண்டில் ஆரம்பமானது என்ற குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல் இல்லை ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது பண்டைக்காலம் தொட்டே தொடர்ந்துவரும் மிகத் தொன்மையான பாரம்பரியமாகும் என்பதை நமது மூதாதையர்களால் கூறப்படுகிறது.

அந்தக்காலங்களில் பாத யாத்திரை செல்பவர்கள் திரும்பி வரலாம் என்று செல்வதில்லை அப்படி சென்ற பலர் காடுகளில் விலங்குகளால் தாக்கப்பட்டு இறந்த சம்பவங்கள் பல உண்டு.

அமைப்பு ரீதியாக சங்கம் ரீதியாக கதிர்காமத்து பாத யாத்திரை குழு என்பது  ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாக 1972 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பக்தரான பற்றிக் ஹரிகன் என்பவரால்தீன் மீள ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது என்று அறியமுடிகிறது.

1972, க்கு பின்னரே பாதயாத்திரீகர் குழுக்கள் என பலர் சேர்ந்து கூட்டாக பய பக்தியுடன் பயணங்களை மேற்கொண்டுள்ளர்.

முன்னோர்கள் கால் பாதம் நிலத்தில் படும்படியாக முள்ளு கல்லு வெயில் நீர் நிலை எல்லாம் தாங்கி  குமண, யால போன்ற அடர்ந்த தேசிய வனப்பகுதிகளில் உள்ள ஆறுகள், கடற்கரைகள் மற்றும் காட்டுப் பாதைகளையே முழுமையாக நம்பி நடந்தனர்.

தற்போது பாத யாத்திரை செலவோர் சிலர் கால் பாதணிகள் அணிந்து அரைக்கால் சட்டைகளுடனும் செல்கின்றனர்.

இன்னும் சிலர் பொழுது போக்கிற்காகவும் செல்கின்றனர்.

முற்காலத்தில் முன்னோர்கள் கடைப்பிடித்த பயபக்திகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருவது கதிர்காமத்து பாத யாத்திரைகளில் காணமுடிகிறது.

ஆரம்பத்தில் கடைப்பிடித்த புனிதத்தன்மை படிப்படியாக குறைந்து செல்வதை காணலாம்.

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம பாதயாத்திரை  யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய  இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து இடம்பெற்றாலும் கடந்த கால ஈழ விடுதலை ஆயுப்போராட்ட காலங்களில் சில வருடங்கள் இடம்பெறவில்லை. தற்போதைய பாத யாத்திரை கடந்ந 2026, மே ,23ம் திகதி ஆரம்பமானது.

வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோ ணமலை, மட்டக்களப்பு, அம்பாறை. மொனராகல ஆகிய ஏழு மாவட்டங்களையும் இணைத்து 55 நாள்களில் 108 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கதிர்காம முருகனை தரிசிக்கும் இப்புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர பாத யாத்திரையாகக் கருதப்படுகின்றது.

இவைகளுக்கு அப்பால் இந்த வருடம் 2026, கடந்த யூன்மாதம் முல்லைத்தீவு, தண்ணீருற்று பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்குச் சென்ற பாதயாத்ரிகர்களுடன் 'சுப்பிரமணியன்' (சுப்பிரமணி) என்ற நாய் இணைந்தது. இந்த முருக பக்தனாகிய நாய், பல நாட்கள் தொடர்ந்து நடந்தே யாத்திரையில் பங்கேற்று சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

கல்முனையை கடக்கும்போது ஒரு இளைஞன் அந்த நாய்கு காலால் உதைத்தசம்பவம், அதன் எதிரொலி நற்பிட்டிமுனை இளைஞன் சபூதியில் கைது என சில வேண்டத்தகாத சம்பவங்கள் என இந்த நாய் யாத்திரையால் ஏற்பட்டதும் உண்மை.

அதைவிட  யாத்தீரிகர்களை பார்பதைவிட மக்கள் அந்த சுப்பிரமணியம் என்ற நாயை பார்க்கும் காட்சிகளும் தொடர்கின்றது.

தற்போது காட்டுப்பாதையால் அந்த நாய் அடியார்களுடன் செல்லும்போது காட்டு விலங்குகளால் நாய்க்கு மட்டுமல்ல பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கும் ஆபத்து வரலாம் என வன ஜீவராசிகளின் அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

மனிதனுக்கு நன்றி செலுத்தும் இந்த நாய் எந்த அடியார்களுடைய நாயும் இல்லை தானாக முருகன் அருளால் முல்லைத்தீவில் தண்ணீர்ஊற்றில் இணைந்து கொண்டது என்றே கூறப்படுகிறது.

எது எப்படியாயினும் பாதயாத்திரை மனிதர்களை விட இந்த சுப்பரமணி நாய்க்கே முக்கியத்துவம் சமூக ஊடகங்களில் வழங்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.


-பா.அரியநேத்திரன்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours