மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில் கட்டிடத் தொழிலாளியான இளைஞன் இன்று புதன்கிழமை (29/07/2026) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய பட்டதாரி இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிரந்தர வேலை கிடைக்கும் வரை தச்சு மற்றும் கட்டுமானப் பணிகளில் உதவியாளராக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
குறித்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த இரு மாடிக் கட்டிடத்தின் மேற்பகுதியில் நின்று, தூணுக்கு அமைக்கப்பட்டிருந்த மரப்பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தூண் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


Post A Comment:
0 comments so far,add yours