(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக இந்த விஷேட வேலைத் திட்டமானது அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான நவீன ரக மின் உயர்த்தியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கல்முனை மாநகர பிரதான வீதி மற்றும் கல்முனை சிறுவர் பூங்கா என்பவற்றில் நீண்ட காலமாக ஒளிராமல் செயலிழந்து காணப்பட்ட மின் விளக்கு தொகுதிகள் கடந்த 02 நாட்கள் இரவு பகலாக மேற்படி மின் உயர்த்தியின் உதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
அவ்வாறே சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா மற்றும் மருதமுனை சிறுவர் பூங்கா என்பவற்றில் செயலிழந்து காணப்பட்ட மின் விளக்குத் தொகுதிகள் யாவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, மின்னொளியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours