(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிராம சேவகர் பிரிவுக்கு தலா வீடு என்ற அடிப்படையில் தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டு வேலைகளை  அரசியல் பேரவை உறுப்பினரும் கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்  அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா நேரில் கள விஜயம் செய்து பார்வையிட்டார்.

இதற்கான வேலைகளின் தற்போதைய நிலமைகளை அறிவதற்காக சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்படும் அனைத்து வீடுகளையும் பார்வை இட்ட அவர்,பயனாளிகளிடம் குறை நிறைகளைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இதற்கான காசோலைகள் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினரின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours