(   வி.ரி.சகாதேவராஜா)

 வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாம்,  மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முதல் தடவையாக சீர்வரிசையுடன் ஆடிப்பூரத் திருவிழா ( 14) வெள்ளிக்கிழமை மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் முன்னிலையில்  ஆடிப்பூரத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது.

முன்னதாக, ஆலயத்தின் மேற்கே உள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் கே.ஜெயசிறில் தலைமையில், முதல் முறையாக சீர்வரிசை, மங்கல வாத்தியங்கள் வாணவேடிக்கைகளோடு ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள் சீர் தட்டுக்களுடன் வரிசையாக வந்தனர்.

பின்னர் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அபிஷேகம், யாகம், விசேட பூஜை என்பன அரோஹரா கோசத்தில் மத்தியில் சிறப்பாக இடம் பெற்றது. 
ஆலய பரிபாலன சபையின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா விசேட சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அதற்கு முன்னதாக சுமங்கலிப் பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைக்கும் நிகழ்வு இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours