(கனகராஜா சரவணன்)
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே இன்று திங்கட்கிழமை (17) மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த சட்டத்தரணி வருண ஜெயசுந்தர கொழும்பிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து உதவி பொலிஸ் மா அதிபரான சம்பத் குமார லியனகே விசேட புலனாய்வு பிரிவு பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையில் இவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றதையடுத்து இவரை கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post A Comment:
0 comments so far,add yours