நூருல் ஹுதா உமர்

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நற்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மீலாத் ஊர்வலம் (26) கல்முனை பிரதேசத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை, நற்பண்புகள், மனிதநேயம், சகோதரத்துவம், சமாதானம் மற்றும் சமூக நல்லிணக்கம் போன்ற உயரிய விழுமியங்களை நினைவுகூரும் வகையில் இம்மீலாத் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊர்வலத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டதுடன், நபி (ஸல்) அவர்களைப் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கல்முனை பிரதேசத்தின் முக்கிய வீதிகளூடாக இடம்பெற்ற இவ்வூர்வலம் ஒழுங்குமுறையுடனும் அமைதியான முறையிலும் நடைபெற்றது. ஊர்வலம் சீராக நடைபெறுவதற்கு கல்முனை பொலிஸார் தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு வழங்கினர்.

மீலாத் ஊர்வலத்தின் மூலம் நபி (ஸல்) அவர்கள் போதித்த அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் மற்றும் நல்லிணக்கத்தை சமூகத்தில் மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நற்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வூர்வலம் கல்முனை பிரதேசத்தில் மீலாத் விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours