(சுமன்)
மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய பொது நூல் நிலையத்திற்குப் புத்தகங்கள் சேகரிக்கும் முகமாக மட்டக்களப்பு றோட்டரிக் கழகம் மற்றும் இந்தியாவின் சென்னை றோட்டரிக் கழகத்துடன் இணைந்ததான 2000 புத்தகங்கள் சேகரிக்கும் நிகழ்வு இந்தியாவின் சென்னை மாநகரத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு நகர் றோட்டரிக் கழக உறுப்பினருமான வைத்திய கலாநிதி இ.சிறிநாத் அவர்களின் இந்தியா விஜயத்தின் ஒரு அங்கமாக குறித்த புத்தக சேகரிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு நகர் றோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் சென்னை றோட்டரிக் கழகத்துடன் இணைந்ததாக குறித்த புத்தகங்கள் சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதன்போது பெறுமதி மிக்கவும் அரியவகையினதான 2000 புத்தகங்கள் கேகரிக்கப்பட்டன.
அங்கு சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் மட்டக்களப்பு புதிய பொதுநூலகத்தின் பாவனைக்காக மட்டக்களப்பு மாநகரசபைக்கு வழங்கப்படவுள்ளதாக மாநகரசபை உறுப்பினரும் மட்டக்களப்பு நகர் றோட்டரிக் கழக உறுப்பினருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்கள் தெரிவித்தார்
.



.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours