இந்நிகழ்வில் சிறுவர்களின் கலை, கல்வி, ஆக்கத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கண்காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், சிறுவர் சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலய பாலர் பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். விவேகானந்தராஜா, திருக்கோவில் வலயத்திற்கான முன்பள்ளிக் கல்விப் பணியக இணைப்பாளர் பி. மோகனதாஸ், முன்பள்ளிக் கல்வி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் எஸ். இர்பானா, தவசாளர் ஆ. தர்மதாச, இந்து மாமன்றத் தலைவர் த. கயிலாயபிள்ளை, ஆறுமுகம் அசோகா, சித்திரா தேவராஜன், திருமதி ரவிலேகா உள்ளிட்ட பிரமுகர்களுடன் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சிறுவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதுடன், அவர்களிடையே படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் சமூகத் திறன்களை வளர்க்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
(எஸ்.ரஞ்சன்)





Post A Comment:
0 comments so far,add yours