(  வி.ரி.சகாதேவராஜா)


 சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுடனான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றது என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் 
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். 

கிழக்கின் அமைதி இனசௌயன்யம் மற்றும் கல்முனை  விவகாரம் குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று (19) புதன்கிழமை பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

​கிழக்கில் இன நல்லிணக்கத்தைப் பேணுதல், தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்தல் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் சீரான செயற்பாட்டை உறுதி செய்யும் நோக்கோடு  நாம் நேற்று முன்தினம் 19.08.2026 சுகாதார அமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

​இச் சந்திப்பில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத்,  வைத்தியசாலையின் நிர்வாகக் கட்டமைப்பு சீராகச் செயற்பட்ட விதம் குறித்து பூரணமாக விளக்கமளித்தார்.

இக் கலந்துரையாடலில் என்னுடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ. சிறிநாத், ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டோம்.

மேலும், சில சமூக ஊடகங்களில் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியான கருத்துக்கள் மற்றும் இன் வன்மங்களை விதைக்கும் அவலம் தொடர்பில் தாம் கவலையை வெளியிட்டதுடன்  மக்கள் மத்தியில் எழுந்துள்ள  உணர்வுகளை அமைதியான வழியில் கையாண்டு இவ்விவகாரத்திற்கு ஒரு சுமூகமான தீர்வை எட்டுமாறு அமைச்சரிடம் எடுத்துரைத்தோம். என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours