திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், திருக்கோவில் கல்வி வலயப் பணிப்பாளர் ஆர். உதயகுமார்  இன்று (02.08.2026)ஆம் திகதி அக்கரைப்பற்றிலுள்ள விபுலானந்தர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.


இதன்போது பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள், மாணவர்களின் கல்வித் தர மேம்பாடு, கற்றல் சூழல் வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. 


பாடசாலையின் வளர்ச்சிக்காக பழைய மாணவர்கள் வழங்கி வரும் பங்களிப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டதுடன், பழைய மாணவர்சங்கத்தின் ஒத்துழைப்புக்கள்  மற்றும்  நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் த. ராசதாதன், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இ. சுவர்ணராஜ், எஸ். சுஜீகாந்த் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.


(ரஞ்சன்)


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours