சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் நிருவாக சபைக் கூட்டம் அமைப்பின் தலைவர் மு.விமலநாதன் தலைமையில் அமைப்பின் உப காரியாலயமான பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலைய கட்டிட தொகுதியில்  03.08.2026 திங்கட்கிழமை  இடம்பெற்றது.


இதில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளரும் இலங்கை கிளையின் ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகரும் பிரபல தொழிலதிபருமான க.துரைநாயகம் அவர்களும் மற்றும் ஏனைய நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

2026 அரை ஆண்டிற்குரிய கணக்கறிக்கைகள் ஆராயப்பட்டதுடன் இவ்வருடத்திற்குரிய செயற்றிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றன.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours