விமானநிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையில் இதுவரை ஆண்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அவரது இந்த நியமனமானது இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதுடன், இந்த துறையில் சிறப்புமிக்க பதவிகளை நோக்கிச் செல்ல எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் விமானத் துறையில் பெண்களுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாகவும் அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பனங்காட்டு மண்ணில் பிறந்த வசந்தி முருகேசு முருகேசு மனோன்மணி ஆகியோரின் புதல்வியாவார்.
இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையில், பெண்களுக்கான சமத்துவத்திலும் பிரதிநிதித்துவத்திலும் ஒரு வரலாற்றுச் சாதனையாக, வசந்தி முருகேசு அவர்கள் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) (AASL) நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக (Security Marshal) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தடையை உடைத்துச் சாதனை படைத்திருக்கும் வசந்தி முருகேசுவின் வெற்றி, எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.
வரலாறுச்சாதனை படைத்த மார்ஷல் வசந்தி முருகேசுவை வாழ்த்துவதில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மண் பெருமை கொள்கிறது.

Post A Comment:
0 comments so far,add yours