மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்கு கடை ஒன்றுக்கு, களுவாஞ்சிகுடி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பூட்டு இடப்பட்டுள்ளது.
நேற்று (18.08.2026)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட அதிரடிப் பரிசோதனையின்போதே குறித்த கடை சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கி வந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கடை உரிமையாளரை 3 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், கடையில் இனங்காணப்பட்ட அனைத்து சுகாதாரக் குறைபாடுகளும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் வரை கடையை மூடி முத்திரையிடுமாறு (பூட்டுமாறு) உத்தரவு பிறப்பித்தது.
(எஸ்.ரஞ்சன்)



Post A Comment:
0 comments so far,add yours