( வி.ரி.சகாதேவராஜா)


 கல்முனை ஆதார வைத்தியசாலையில்  சட்டப்படி முறையான சுற்றுநிருபப்படி சுகாதார உதவியாளர்களுக்கு சீருடை நடவடிக்கைக எடுக்கப்பட்டிருக்கின்றது .
ஆனால் நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட பிரச்சினையை அரசியல் ரீதியாக சில வங்குரோத்து அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களில் ஊதியதன் விளைவுதான் இந்த  கொந்தளிப்பு நிலை. 
அதனை சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தற்காலிகமாவது தீர்த்து வைத்ததையிட்டு நன்றி கூறுகிறேன். என்று  பாராளுமன்றத்தில் பேசிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார் .

அவர் அங்கு மேலும் பேசுகையில் ..

இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், பொருளாதாரத்தை சிதைக்க வேண்டும் என்பதற்கான சில வங்குரோத்து அரசியல்வாதிகள்  என்பதற்காக முகநூல் youtube மூலமாகவும் ஏற்படுத்தும் இனவாத வன்மப்பதிவுகளை உலாவிட்டார்கள் .

எனினும் புதிய அரசாங்கம் மூவினங்களையும் சமமாக பார்க்கின்ற என்ற அடிப்படையில் இந்த பிரச்சினை இந்தளவிலேயே தீர்த்து வைத்திருக்கின்றார்கள் நன்றி கூறுகின்றேன் .

கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சுகுணன்  மிகவும் நியாயமாக சகல இனங்களை மதித்து நடப்பவர். அங்கு இத்தார் ரம்ஜான் நிகழ்வுகளை நடாத்தி முஸ்லிம்களையும் மதித்தி வந்தவர். அவர் சட்டப்படி சுற்று நிருபப்படியே சீருடை விவகாரத்தை கையாண்டார். அவர் எந்த தப்பும் அநீதியும் செய்யல்லை . அங்குள்ள வைத்தியசாலை அபிவிருத்தி குழுத் தலைவர் சந்திரசேகரன் ராஜனும் அதனையே வலியுறுத்தி இருந்தார் .
ஆனால் இதைப் பொறுக்காத சில வங்குரோத்து அரசியல் வாதிகள் தான் இதனை பூதாகரமாக மாற்றினார்கள்.
எனினும் இதனை தீர்த்து வைத்த அமைச்சருக்கு நன்றிகள் என்றார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours