எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சின்டல் கோப் அமைப்பு மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து நடாத்திய "டெங்கு நுளம்புகளை ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஒழிப்போம்" எனும் தொனிப்பொருளில் நடாத்திய நிகழ்வு கல்லடி ஸ்ரீமுருகன் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

சின்டல் கோப் அமைப்பின்
பொறியியலாளர் யோ.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர நகரபிதா சிவம் பாக்கியநாதன், ஆணையாளர் நா.தனஞ்செயன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன், வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார்,
சீ.ரி.ஓ. பிருந்தன் கீர்த்திநாதன், மாநகரசபை உறுப்பினர்களான
சரவணமுத்து பிறேமானந்தன்,
என்.ரகுநாதன்,
ஆர்.விக்னேஸ்,
எஸ்.ஜெயந்திரகுமார்,
எஸ்.தெய்வேந்திரன்,
வைத்தியர் கே.ஈ.கருணாகரன், கல்லடி சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவர் வேலுப்பிள்ளை மேகநாதன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ரோண் கமராக்கள் மாநகர நகரபிதா சிவம் பாக்கியநாதனால் உத்தியோகபூர்வமாக வானில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் கல்லடி மற்றும் கல்லடி வேலூர் பகுதிகளில் டெங்கு பரவும் இடங்கள் முதற்கட்டமாக இனங்காணப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இத்தொழில்நுட்பம் தொடர்பாக கல்லடி விநாயகர் வித்தியாலய தரம் 3 - 5 வரையான மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours