சா.நடனசபேசன்
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட த்தில் கராத்தே பயிலும் மாணவர்களுக்கான விசேட செயலமர்வு, யப்பான் கராத்தே மருயோசிக்காய் அமைப்பின் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ,இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி முகாம், இடம் பெற்றது .இப்பயிற்சி செயலமர்வானது, கிழக்கு மாகாண பிரதம கராத்தே போதனாசிரியரும், பரீட்சகருமான, பொறியியலாளர் எஸ். முருகேந்திரன் தலைமையில் புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் இடம் பெற்றது.
இதில் கராத்தே சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்களான எஸ் பால்ராஜ், எஸ். சோபன்ராஜ் திருமதி ஆர் முருகேந்திரன் ஆகியோர்களும் கலந்து கொண்டடனர். இப்பயிற்சி முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட கராத்தே வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















Post A Comment:
0 comments so far,add yours