( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு பாரம்பரிய லயன்ஸ் கழகமும்,இலங்கை அபேக்சா நன்கொடை நிறுவனமும் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பல மில்லியன் பெறுமதி வாய்ந்த நன்கொடைளை பொருட்களாக வழங்கியது.

 இந் நிகழ்வு நேற்று(30) வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் மருத்துவர் ஆர் முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது .

அபேக்சா நிறுவனத்தின் தலைவர் லயன் எஸ்.கே குமார், மற்றும் அபேக்சா நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்களான உ.தேவகுமார், எந்திரி.த.மயூரன் மற்றும் நி.அனிஸ்டன் அத்துடன் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் 306 D10 ஆளுனர் லயன் ஷாகிர் அகமட், முன்னால் ஆளுனர் லயன் லோகேந்திரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன்  இடம்பெற்றது .

இவ்விழாவுக்கு வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய பிரிவின் பொறுப்பாளரும் வைத்திய நிபுணருமான வைத்தியர் ஏ. இக்பால்  வரவேற்புரை நிகழ்த்தினார்.

 அதனை தொடர்ந்து 
 நாளக் குழாய்களை கண்டுபிடிக்கும் இயந்திரம் ,
சிறுநீர் இழக்கி மருந்து வகைகள் 
தண்ணீரை சுத்தப்படுத்தி வடிகட்டி குடிநீருக்குப் பாவிக்கும் பொறிமுறை கொண்ட இயந்திரங்கள் ,
சுவரில் மாட்டும் மின்விசிறிகள்,
சக்கர நாற்காலிகள் போன்ற பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

 புற்றுநோய் சிகிச்சைகளுக்காக வருகின்ற நோயாளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி இருந்து சிகிச்சை பெறும்  நோயாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில்  பால் தேனீரும் சிற்றுண்டிகளும் வழங்கி வருகின்றன.

 இந்த நிகழ்வு நேற்று டன்  நூறாவது நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்தோடு குழந்தை புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வைத்தியசாலை, பாடசாலைகள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களிலும் வழங்கி வைக்கப்பட்டது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours