(சுமன்)


தற்போது நாட்டில் நிலவும் டெங்கு அபாய நிலையைக் கருத்திற்கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சமூக மட்ட அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கமைவாக புளியந்தீவு திரௌபதை அம்மன்  சமூக நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் புளியந்தீவு பகுதியில் இன்று மற்று நாளைய தினங்களில் விசேட டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினம் (01) காலை திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் குறித்த சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

திரௌபதை அம்மன் சமூக நற்பணி மன்றத்தின் தலைவர் ச.சனத்குமார், செயலாளர் வி.லவசாந் ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த சிரமதானப் பணியில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி, புளியந்தீவு பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு மற்றும் பிரஜா பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆனைப்பந்தி ஆலய தலைவர் சி.மங்களராஜன், திரௌபதை அம்மன் ஆலய தலைவர் ந.விக்னதாஸ், ரிதம் இளைஞர் கழகம் மற்றும் ரிதம் சனசமூக நிலைய உறுப்பினர்கள், திரௌபதை அம்மன் சமூக நற்பணி மன்ற பொருளாளர் திருமதி ச.நிலானி உள்ளிட்ட உறுப்பினர்கள், புளியந்தீவு மீனவர் சங்கத் தலைவர் சிவலிங்கம் மற்றும் அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





இதன் போது திரௌபதை அம்மன் ஆலயத்தை அண்டிய பிரதேசம் வாவிக்கரை வீதி, 03ம் குறுக்கு வீதி, புளியடி ஒழுங்க, கோவில் வீதியூடா ஆனைப்பந்தி ஆலயம் வரையிலான வீதி வடிகாண்கள் துப்பரவு செய்யப்பட்டு வடிகாண் மற்றும் அதன் ஓரங்களில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டிருந்தன.

குறித்த கழிவுகள் அகற்றும் பணிகள் மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

குறித்த சிரமதானப் பணிகளுக்கு கையுறைகள், முகக்கவசங்கள், குடிநீர் என்பன அபேக்சா டொனேசன் அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டது. காலை உணவு ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தினாலும், குளிர்பாண வசதிகள் திரௌபதை அம்மன் ஆலயத்தினாலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours