மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பழுகாமம் அருள்மிகு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை (25.08.2026) ஆம் திகதி கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.மஹோற்சவத்தின் ஆறாம் நாள் திருவிழாவான இன்று (30.08.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, குவேரலட்சுமி திருவிழாவைச் சிறப்பிக்கும் முகமாக விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.
பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பூசைப்பொருட்கள், குவேரனை ஏந்தியவாறு ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வரும் விசேட நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானை தரிசித்து அருள் பெற்றனர்.
(எஸ்.ரஞ்சன்)





Post A Comment:
0 comments so far,add yours