வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன ஏககுண்டபக்ஷ அஷ்டபந்தன சுவர்ணபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா (குடமுழுக்கு பெருஞ்சாந்தி எதிர் வரும் (23.08.2026)ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
(19.08.2026)ஆம் திகதி புதன்கிழமை விக்னேஸ்வர வழிபாடு, அங்குரார்ப்பணம் மற்றும் கருமாரம்பத்துடன் கும்பாவிஷேக கிரியைகள் தொடங்கும்.
அதனைத்தொடர்ந்து ஐந்து நாட்கள் பல்வேறு யாககால பூஜைகளும், ( 22.08.3026)ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும் நடைபெறும்.
மஹா கும்பாபிஷேகம், தமிழ் ஆவணி மாதம் 7-ஆம் நாள் (23.08.2026) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை ஏகாதசி திதியும், மூல நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபமுகூர்த்த வேளையில், காலை 7.48 மணி முதல் 9.43 மணி வரை உள்ள கன்னி லக்னத்தில் சிறப்பாக நடைபெறும்.
அன்றைய தினம் காலை மஹா கும்பாபிஷேகம், மூலமூர்த்தி கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை ஆகியவை நடைபெறும்.
தொடர்ந்து 11 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று, 12-ஆம் நாளான (0 4.09.2026)ஆம் திகதி வெள்ளிக்கிழமை பால் குட பவணி 1008 சங்குகளால் சங்காபிஷேகத்துடன் விழா இனிதே நிறைவடையும்.
இவ்விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு எம்பெருமான் ஸ்ரீ முத்து விநாயகரின் அருளைப் பெறுமாறு ஆலய நிருவாகத்தினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
(எஸ்.ரஞ்சன்)

Post A Comment:
0 comments so far,add yours