( வி.ரி.சகாதேவராஜா)

பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று(5) புதன்கிழமை பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் எம்எஸ்எம். முஷாரப் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் "டெங்கற்ற கிழக்கு மாகாணம் " என்ற வேலைத் தொடரில் ஓர் அங்கமாக கோமாரி பாடசாலை சூழலில் இச் சிரமதானம் மேற்கொள்ளப் பட்டது.

அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் சாமர ஜெயதிலக  பிரதானமாக கலந்து சிறப்பித்தார்.

கோமாரி பிரதேச பிரதிநிதியான பொத்துவில் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் த.சுபோதரன், பிரதேச சபை ஊழியர்கள்,சுகாதார துறையினர், பாடசாலை மாணவர்கள் மற்றும் 
 பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த சிரமதானத்தில் கலந்து கொண்டார்கள் .



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours