மருதமுனைப் பிராந்திய இறை இல்லப் பணியாளர்கள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் – 2026
புதிய நிர்வாகிகள் தெரிவு – “மஸ்ஜித் மைய மக்கள் – மக்கள் நேய மஸ்ஜித்” இலக்கை நோக்கிய புதிய பயணம்
மருதமுனைப் பிராந்திய இறை இல்லப் பணியாளர்கள் நலன்புரிச் சங்கத்தின் (MEWS) 1448/2026 வருடாந்த பொதுக் கூட்டம், 2026 செப்டெம்பர் 13ஆம் திகதி இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 8.15 மணியளவில் மருதமுனை மத்திய பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.
SESDO Sri Lanka தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நெறிப்படுத்தலில், அதன் தலைவர் நாபி எம். முஸ்னீ தலைமையில், சிரேஷ்ட ஆலோசகர் அஷ்ஷெய்க் FMA. அன்சார் மௌலானா நழீமி அவர்களின் வழிகாட்டலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மருதமுனைப் பிராந்தியத்திலுள்ள சுமார் 21 பள்ளிவாசல்களில் கடமையாற்றும் பேஷ் இமாம்கள், முஅத்தின்மார்கள் மற்றும் அதிகாரியார்கள் உள்ளிட்ட இறை இல்லப் பணியாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் SESDO Sri Lanka அமைப்பின் பிரதித் தலைவர் எம்.ஐ. பவ்மி, செயலாளர் மிஸாஜ் அஹமத், பொருளாளர் எம்.ஏ. அப்ரார் ஹுசைன், உதவிச் செயலாளர் ராசி அஹமத், சமய கலாச்சார இணைப்பாளர் அஷ்-ஷேக் அல்-ஹாபிழ் ரிலா கமால்தீன் (நளீமி), செயற்குழு உறுப்பினர் ஜே.எம். ஹபீழ் மற்றும் உயர் பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் விசேட விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், SESDO Sri Lanka சிரேஷ்ட ஆலோசகர் விரிவுரையாளர் AJL. வஸீல், ஊடக இணைப்பாளர் MEGA TV MBM. ராஜீத், மருதமுனை மத்திய பள்ளிவாசல் தலைவர் மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் MCM. அஸ்வர், பொருளாளர் MHM. சமீம் ஹாஜி, கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் MIM. மஸீன் இஸ்லாஹி, பொலிஸ் உத்தியோகத்தர் MI. அப்துஸ் ஸலாம் மற்றும் சமூகப்பணியாளர், ஊடகவியலாளர் மருத நியூஸ் றாசிக் நபாயிஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
Vision 2030/2040 – “மஸ்ஜித் மைய மக்கள் – மக்கள் நேய மஸ்ஜித்”
தனது தலைமையுரையில் SESDO Sri Lanka தலைவர் நாபி எம். முஸ்னீ, SESDO Sri Lanka தனது 19ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வின்போது முன்வைத்த “Vision 2030/2040 Maruthamunai” கொள்கைப் பிரகடனத்தின் “மஸ்ஜித் மைய மக்கள் – மக்கள் நேய மஸ்ஜித்” என்ற இலக்கை நோக்கிய பயணம் MEWS இன் புதிய நிர்வாகிகள் தெரிவுடன் ஆரம்பமாகின்றது எனத் தெரிவித்தார்.
மேலும், மருதமுனைப் பிராந்தியத்தின் பள்ளிவாசல்களையும் அவற்றில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்மார்கள் மற்றும் ஏனைய இறை இல்லப் பணியாளர்களையும் வலுவூட்டுவது இக்கொள்கையின் முக்கிய அடித்தளமாகும் எனக் குறிப்பிட்டார்.
SESDO Sri Lanka தனது 19ஆவது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடிய சந்தர்ப்பத்தில் முன்வைத்த இக்கொள்கை நோக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் MEWS மற்றும் அதன் அங்கத்தவர்களான இமாம்கள், முஅத்தின்மார்கள் மற்றும் இறை இல்லப் பணியாளர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் இறை இல்லப் பணியாளர்களின் சேவையை கௌரவிப்பது, அவர்களுக்கு உரிய சமூக அங்கீகாரத்தை வழங்குவதோடு, எதிர்கால தலைமுறையினரையும் இறை இல்லச் சேவைகளில் ஈடுபட ஊக்குவிக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன் MEWS அமைப்பின் புதிய யாப்பு உப விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது.
1448/2026 புதிய நிர்வாகிகள் தெரிவு
2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மருதமுனைப் பிராந்திய இறை இல்லப் பணியாளர்கள் நலன்புரிச் சங்கம், MEWS என்ற சுருக்கப் பெயருடன்,
“இறை இல்லங்களில் பணியாற்றுவோரின் – நலனில் ஒன்றிணைவோம்; துன்பத்தில் துணை நிற்போம்.”
என்ற கொள்கை வாசகத்துடன், புதிய யாப்பு மற்றும் உபவிதிகளுக்கு அமைவாக 1448/2026 காலப்பகுதிக்கான புதிய நிர்வாகக் குழுவைத் தெரிவு செய்தது.
புதிய நிர்வாகக் குழு
தலைவர்:
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் AR. பைசல் கியாஸ் (பலாஹி)
செயலாளர்:
சகோ. MNM. றபாஸ்
பொருளாளர்:
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் MH. நஜிமுத்தீன் (ஹாமி)
உப தலைவர்:
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் SM. றியாஸ் (நழீமி)
உதவிச் செயலாளர்:
சகோ. ARM. ஸஹ்றான்
கணக்காய்வாளர்:
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் AHM. பர்ஸான் (நஹ்ஜி)
உறுப்பினர்கள்:
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் ARM. ஜெரீர் (பஹ்மி)
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் AS. அஸ்மி (ஹாமி)
அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் MUM. முபஸ்ஸிர்
சகோ. AA. முபர்ரத்
சகோ. ZM. பௌஸான்
சகோ. MB. அபுல் கலாம்
புதிய தலைவரின் கன்னியுரை
புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் AR. பைசல் கியாஸ் தனது கன்னியுரையில், MEWS ஆரம்பிக்கப்பட்டு 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சங்கத்தை அதன் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் உபவிதிகளுக்கு அமைவாக ஆரோக்கியமான முறையில் முன்னெடுத்துச் செல்ல புதிய நிர்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், SESDO Sri Lanka அமைப்பு MEWS இன் பரிணாம வளர்ச்சிக்கும், அதன் நலன்புரிச் செயற்பாடுகளுக்கும் தொடர்ச்சியாக வழங்கிவரும் பங்களிப்புகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
புதிய செயலாளர் சகோ. MNM. றபாஸ் நன்றியுரை வழங்கினார்.
நீண்டகால இறை இல்லச் சேவைக்கு கௌரவம்
நிகழ்வின் முக்கிய அம்சமாக, 20 வருடங்களுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் தொடர்ந்து இமாமத் பணியாற்றி வரும் அல்-ஹாபிழ் MMM. நஸ்றீம் அவர்களின் நீண்டகால இறை இல்லச் சேவை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அதேபோன்று, சுமார் 32 வருடங்களாக முஅத்தினாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் சகோ. AL. ஹக்கீம் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இக்கௌரவிப்பு நிகழ்வு, இறை இல்லப் பணியாளர்களின் நீண்டகால அர்ப்பணிப்பான சேவைக்கு சமூக மட்டத்தில் உரிய அங்கீகாரம் வழங்கும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது.
நிகழ்வுகளை அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் றிழா கமால்தீன் நழீமி தொகுத்து வழங்கினார்.
இறுதியில் இரவு உணவு வழங்கப்பட்டதுடன், குழு நிழற்படங்களும் எடுக்கப்பட்டு வருடாந்த பொதுக் கூட்ட நிகழ்வுகள் சிறப்பாக நிறைவுற்றன.
“இறை இல்லங்களில் பணியாற்றுவோரின் – நலனில் ஒன்றிணைவோம்; துன்பத்தில் துணை நிற்போம்.”
ஊடகப் பிரிவு
SESDO Sri Lanka – தன்னார்வ தொண்டு நிறுவனம்
“மக்களின் வெளிச்சம்”








Post A Comment:
0 comments so far,add yours