மருதமுனைப் பிராந்திய இறை இல்லப் பணியாளர்கள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் 2026 செப்டெம்பர் 13ஆம் திகதி இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 8.15 மணியளவில் மருதமுனை மத்திய பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.
சீஸ்டோ சிறிலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நெறிப்படுத்தலில், அதன் தலைவர் நாபி எம். முஸ்னீ தலைமையில், சிரேஷ்ட ஆலோசகர் அஷ்ஷெய்க் எப்.ஏ.எம்.. அன்சார் மௌலானா நழீமி அவர்களின் வழிகாட்டலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது..
மருதமுனைப் பிராந்தியத்திலுள்ள சுமார் 21 பள்ளிவாசல்களில் கடமையாற்றும் பேஷ் இமாம்கள்,முஅத்தின்மார்கள் மற்றும் அதிகாரியார்கள் உள்ளிட்ட இறை இல்லப் பணியாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சீஸ்டோசிறிலங்காஅமைப்பின் பிரதித் தலைவர் எம்.ஐ. பவ்மி, செயலாளர் மிஸாஜ் அஹமத், பொருளாளர் எம்.ஏ. அப்ரார் ஹுசைன், உதவிச் செயலாளர் ராசி அஹமத்இ சமய கலாச்சார இணைப்பாளர் அஷ்-ஷேக் அல்-ஹாபிழ் ரிலா கமால்தீன் (நளீமி), செயற்குழு உறுப்பினர் ஜே.எம். ஹபீழ் மற்றும் உயர் பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் விசேட விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். இதன்போது புதியநிர்வாகத்தேர்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours