(ஆ.நிதாகரன்) பல வருட காலமாக இவ்வீதியானது புனரமைப்பு செய்யப்படாமல் இருந்தமையினால் மழை வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில்  இவ்வீதியானது பெரும்பாலான இடங்களில் சேதமடைந்து போக்குவரத்து செய்யமுடியாத நிலைமை காணப்பட்டமை விஷேட அம்சமாகும்.

போரதீவுப்பற்று பிரதேச சபை இவ் வீதியை பொறுப்பெடுத்து புனரமைப்புக்கு வழிகோருகின்றது இவ் வீதியை பயன்படுத்தி ஆனைகட்டியவெளி,காக்காச்சிவட்டை,கல்வட்டை,சின்னவத்தை முதலிய பிரதேசங்களுக்கு நாளாந்தம் போக்குவரத்தினை செய்யும் பொதுமக்கள் ,பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது போக்குவரத்தை பல சிரமங்களுக்கு மத்தியில்    மேற்கொண்டு வந்தனர்.

இனிவரும் காலங்களில் இவ்வீதியானது முழுமையாக கொங்கிறீற் மற்றும் நீர் இலகுவான முறையில் கடந்து செய்வதற்குரிய வடிகான் வசதிகளும் சிறந்த முறையில் ஏற்படுத்தப்பட்டு புனரமைப்பு செய்யப்படுவதால் அனைவரும் தங்கள் போக்குவரத்தினை சீரமங்கள் இல்லாமல் பயணிக்க முடியும்.

 இவ் வீதிக்கு சுமார் 6 கோடியே 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.









Share To:

Post A Comment:

0 comments so far,add yours