மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச சபையினால் "உள்ளூர் செயற்பாட்டால் உறுதியான சமூகங்கள் - வளமான எதிர்காலம்" எனும் கருப்பொருளில் "உள்ளூராட்சி வாரம் - 2026" தொடர் நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் 5-ஆம் நாள் நிகழ்வான "இலக்கியம், கல்வி, நூலகம் மற்றும் விளையாட்டு தினம்" நேற்று (18.09.2026) ஆம் திகதி வெள்ளிக்கிழமை, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இத்தினத்தின் முக்கிய நிகழ்வாக, புனரமைக்கப்பட்ட சங்கர்புரம் பொதுநூலகம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
"அறிவு வளர்த்தால் சமூகம் வளரும் - நூலகம் திறந்தால் நற்பயணம் பிறக்கும்" எனும் உயரிய நோக்கில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
தொடர்ந்து, பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில், வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் "செயற்கை நுண்ணறிவு (AI)" குறித்த சிறப்புப் பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த. கயசீலன், பிரதேச சபையின் செயலாளர் சண்முகராஜா விஜிதராஜா, வட்டார பிரதேசசபை உறுப்பினர்கா.யோகராசா, சனசமூக உத்தியோகஸ்தர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நூலகர்கள், மாணவர்கள் மற்றும் கிராமமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(எஸ்.ரஞ்சன்)








Post A Comment:
0 comments so far,add yours