இரு தமிழர்கள் உட்பட. மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஆனந்தி கனகரத்தினம்,
கொழும்பு மாவட்ட நீதிபதி ஞானேச லலித் கன்னங்கர ஆகியோர் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீதிச் சேவையின் விசேட தர அதிகாரிகளாவர்.
பின்வருவோர் இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (23/09/2026) முற்பகல் 10, மணிக்கு உரிய நீதிபதிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

Post A Comment:
0 comments so far,add yours