​

​மட்டக்களப்பு மாவட்டம், மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியின் மூங்கிலாறு வெள்ளப்பாலம் பகுதியில் அமைந்திருந்த பாரிய மருதமரம் ஒன்று நேற்று(27.09.2026)ஆம் திகதி  திடீரென தீப்பற்றி எரிந்தமையால் அப்பகுதியில் கடும் வீதிப் போக்குவரத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.


​சம்பவம் தொடர்பில் உடனடியாகச் செயற்பட்ட போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, பிரதேச சபை ஊழியர்கள் நீர்த்தாரைகளைப் பயன்படுத்தித் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.


​இருப்பினும், தீயின் தாக்கத்தால் குறித்த மரம் பலத்த சேதமடைந்துள்ளதால், அது எந்த நேரத்திலும் வீதியில் முறிந்து விழக்கூடிய அபாயகரமான சூழல் நிலவுகின்றது.


​இதன் காரணமாக, இவ்வீதியைப் பயன்படுத்தும் பாதசாரிகள் மற்றும் வாகனச் சாரதிகள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


​இச்சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







(எஸ்.ரஞ்சன்)

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours