இந் நிகழ்வில் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்வி ப் பணிப்பாளர்கள், ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ,என கலந்துகொண்டு ஓய்வுபெறவிருக்கும் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களை பிரதான நுழைவாயிலிருந்து ஆசிரியர்கள் கௌரவமாக அழைத்து வரப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், அதிபர் ஜே. ஆர்.டேவிட் அமிர்தலிங்கத்தின் கல்விப் பணி, அவர் புரிந்த சாதனைகள் மற்றும் சிறந்ததொரு மாணவ சமூகத்தை உருவாக்கிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை நினைவு கூர்ந்து ஆசிரியர்கள்,கல்வி சாரா உத்தியோகத்தர்கள் வாழ்த்தி இருந்தனர்.
இதன்போது அவருக்கு வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டதுடன் நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டார் .
இந் நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Post A Comment:
0 comments so far,add yours