சா.நடனசபேசன்

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சம்மாந்துறை கல்விவலயத்தின் ஏற்பாட்டில் நாவிதன்வெளிக்கோட்டத்தில் உள்ள வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயம் மற்றும் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலய மாணவர்களிடையிலான தேசிய நூலக அறிவுத்திறன் விவாதப்போட்டி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைரோஸ்கான் அவர்களது தலைமையில் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் 29 ஆம்திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.

மாணவர்களிடையே அறிவு வளர்ச்சிக்கு அதிக பங்களிப்புச்செய்வது அச்சு ஊடகமா இலத்திரனியல் ஊடகமா எனும் தலைப்பில் விவாதப் போட்டி நடைபெற்றதில் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய மாணவர்கள் முதலாம் இடத்தினைப்பெற்றனர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர்.எஸ் .மகேந்திரகுமார், சம்மாந்துறை வலயத்தின் நூலகத்திற்குப்பொறுப்பான ஆசிரிய ஆலாசகர் மேஜர்.எம்.வை.ஏ.நாசீர், வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் கே.தியாகராஜா ,பிரதிஅதிபர் எம்.தர்மலிங்கம் மற்றும் பிரதம நடுவராக ஆசிரிய ஆலாசகர் எம்.றிபாயிஸ் நேரக்கணிப்பாளராக ஆசிரியர் ஏ.றகிம் புள்ளிக்கணிப்பாளராக ஆசிரியர் எம்.எம்.மனாஸீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.





































Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours