1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பெற்ற கதிரவன் கலைக் கழகத்தின் பொன்விழா கடந்த 27.09.2026 (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 3.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் கதிரவன் த.இன்பராசா தலைமையில் கோலாகலமாக இடம் பெற்றது.








கதிரவன் கலைக் கழகத் தாபகர் கலாபூசணம் கிராமியக் கலைஞர் சின்னத்தம்பி தங்கராசா  முன்னிலையில்,  சிவயோகச் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார், அருட்தந்தை நவாஜி அடிகளார், முன்னாள் கலாசார உத்தியோகத்தர் மௌலவி முசாதிக் ஆகியோர் ஆன்மீக விருந்தினர்களாகப் பங்குபற்ற, கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் வாழ்த்துரையோடு நிகழ்வுகள் ஆரம்பமானது.

வரலாறு காணாத வகையில் பல நாடுகளிலிருந்து விருந்தினர்களும், விருது பெறுவோர்களும், பேராளர்களும், சிறப்புக் கௌரவம் பெறுபவர்களும் பங்குபற்றிய இந்நிகழ்வில் கௌரவம் மிகு அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், ஆன்மீகவாதிகள், கலை இலக்கியவாதிகள், வர்த்தகப் பிரமுகர்கள் என்று மண்டபம் நிறைந்த சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்து இருந்த இடமாக பொன் விழா மண்டபம் காட்சியளித்தது.

நிகழ்வின் பிரதானமாக "ஊரிலிருந்து உலகம் வரை " பொன்விழா சிறப்பு மலர் வெளியீடும் - கதிரவன் விருது வழங்கலும் இடம்பெற்றது.

பொன் விழா மலரின் முதற் பிரதியை 
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த திரு திருமதி செந்தூரன்  குடும்பத்தினர் 111,111/- வழங்கி பெற்றுக் கொண்டமை அரங்கில் ஒரு ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

கதிரவன் முன்னேற்றத்திற்காகவும்,  சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் ஆதரவு வழங்கிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற 50 பேராளர்கள் கதிரவன் விருது வழங்கி கௌரவிக்கப்பெற்றமை நிகழ்வின் ஓர் உச்சமாக காணப்பெற்றது. 

இந்தியா போபால் கம்பன் கழகம் மற்றும் டில்லி கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் பா.குமார், கவிமலர்கள் பைந்தமிழ் சங்கத் தலைவி ரித்து சூர்யா, கலை இலக்கிய ஆர்வலர் சென்னை கதிரவன் இணைப்பாளர் சங்கர் கந்தசாமி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்தும் மலேசிய கலை இலக்கிய பேரவையின் முன்னாள் தலைவர் இராஜேந்திரன் அவர்கள் மலேசியாவில் இருந்தும், எழுத்தாளர் சுப்ரமணியம் லோகநாதன் லண்டனில் இருந்தும், 
கலாபூஷணம் கவிதாயினி
எம்.என். நிஸ்வத்துல் பாத்திமா எச்.டீன், கொழும்பிலிருந்தும், ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றிய தலைமை குழுவினர் தலைவர் மருத்துவ நிபுணர் சிவன் சுதன் தலைமையில்  யாழ்ப்பாணத்தில் இருந்தும், ஓம் சர்வதேச அறக்கட்டளைத் தலைவர்  நடராசா ஜனகதீபன் மற்றும் கதிரவன் வவுனியா இணைப்பாளர் றெபாட் சுஜிவன் ஆகியோர்  வவுனியாவில் இருந்தும்,  கவிஞர் எஸ்.பி நாதன் அம்பாறையிலிருந்தும் நிகழ்வில் பங்கு பற்றியமை விசேட அம்சமாகும்.

நிகழ்வின் நிறைவில் பொன்விழா நினைவாக சிறப்புக் கௌரவங்கள் வழங்கப் பெற்றமையும் , கதிரவன் உறுப்பினர்களின் சாதித்த பிள்ளைகளுக்கான கௌரவங்கள் வழங்க பெற்றமையும் விசேட அம்சங்களாகும்.


வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours