எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த உத்தியோகத்தர்களை, மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் தலைமையிலான பதவி நிலை உத்தியோகத்தர்கள் இணைந்து வரவேற்றனர்.
இதன்போது, 2025ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமைக்கான காரணிகள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட உற்பத்தித்திறன் செயற்பாடுகள் தொடர்பாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரினால் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் வளங்கள், முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தளங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் வருகை தந்த உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து, வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலகத்தின் பல்வேறு கிளைகளுக்கும் விஜயம் செய்து, அங்கு முன்னெடுக்கப்படும் உற்பத்தித்திறன் சார்ந்த செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர்.
மாவட்ட செயலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உற்பத்தித்திறன் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் தமது பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

.jpeg)

.jpeg)
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours