உலக முட்டை தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக வவுணதீவு அரச காலநடை வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் வவுணதீவு பாவற்கொடிச்சேனை கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் கற்பினித் தாய்மார்களுக்கு இலவச முட்டை வழங்கும் செயற்திட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.


வவுணதீவு அரச கால்நடை வைத்தியர் G.D. சஜினி அவர்களின் தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில் வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதராப் பரிசோதகர், SPMH, பிரதேச மருத்துவ மாது, காலநடை வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள், கற்பினித் தாய்மார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


கற்பினித் தாய்மார்கள் முட்டை உட்கொள்ளும் விடயத்தை ஊக்குவிக்கும் முகமாக சர்வதேச முட்டை தினத்தில் குறித்த இலவச முட்டைகள் இருத்தைந்து தாய்மார்களுக்கு தலா 25 முட்டைகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours