(அஸ்லம் எஸ்.மௌலானா)


மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கல்முனை மாநகர சபையினால் Volleyball Court ஒன்று அமைக்கப்படவுள்ளது.


மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்திற்கு நேற்று வியாழக்கிழமை (08) விஜயம் மேற்கொண்ட கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ், மைதானத்தின் வடக்குப் புறமாக நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள பகுதியில் விளையாட்டு வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் Volleyball Court ஒன்றை அமைப்பது தொடர்பில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.


இதனைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபை நிதியின் மூலம் இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாநகர சபையின் கணக்காளர், வேலைகள் அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அறிவுறுத்தல் வழங்கினார்.


அதேவேளை மைதானத்தின் மேலதிக நுழைவாயில் கதவுகளை கல்முனை மாநகர சபை நிதியின் மூலம் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.


மேலும், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டில்

மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் புதிய கழிவறைத் தொகுதி அமைக்கும் வேலைத் திட்டமும் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் தேவைகளை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகள், மைதானத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு முன்னெடுக்கப்படுவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours