(கனகராஜா சரவணன்)
கனடாவில் இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழ் மக்களை மீள இலங்கைக்கு கொண்டு வருவதாக கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பு அதற்கான திட்டம் இல்லாது இரு நாட்டு அரசுகளுடன் பேசாது ஒரு உத்தரவாதம் இன்றி மக்களிடம் வசூலித்து வருகின்றனர் எனவே இந்த அமைப்புகள் பணம் வசூலிப்பதை உடன் நிறுத்த வேண்டும் வசூலித்த பணம் எவ்வளவு என உடன் அறிவிக்க வேண்டும். என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழ் மக்களை மீள இலங்கைக்கு கொண்டு வருவதாக கனடாவில் கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பு பணம் வசூலித்து வருவது தொடர்பாக சில சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பாக இந்தியா திருச்சி மற்றும் புலால் முகாம்களில் உள்ள மக்கள் தாங்கள் தாய் நாட்டுக்கு வரப்போகின்றோம் அதற்கான ஆயத்தங்கள் செய்து தருமாறு என்னுடன் தொடர்பு கொண்டு கோரியுள்ளனர் இதற்கமைய எதிர்வரும் மாதம் இந்தியாவுக்கு குழு ஒன்றுடன் செல்லவுள்ளேன் அப்போது அனைத்து முகாம்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன்
இந்த நிலையில் கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பும் பாதயாத்திரையாக சென்று பணம் வசூலிக்கின்றனர் இது கனடாவில் மாத்திரம் அல்ல பல ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு பணம் வசூலித்து வருகின்றனர்
இந்த அமைப்புகள் பணம் வசூலிப்பதை பாராட்டுகின்றோம் இந்தியாவில் அகதிகளாக இருக்கும் மக்களை மீளக் குடியமர்த்துவது நல்ல விஷயம் ஆனால் அதற்கான திட்டமிடல் இருக்கிறது அந்த திட்டத்தை வெளிப்படுத்தியதா? இலங்கை அரசுடன் அல்லது இந்திய அரசுடன் பேசினார்களா ? யார் உத்தரவாதம் தந்தார்கள் ? இவைகள் எதுவும் இல்லாமல் எப்படி பணம் வசூலிப்பார்கள்.
கடந்த காலத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் போராட்டத்தை ஆதரித்து கஷ்டப்பட்டு உழைத்து கொடுத்து இன்று கடனாளியாக எத்தனையோ பேர் கடன் கட்ட முடியாது இரண்டு அல்லது மூன்று தொழில்களை செய்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
இவ்வாறான நிலையில் முதலாவது அந்த மக்கள் வர விரும்ப வேண்டும் அவர்களை கொண்டு வந்தால் அவர்களுக்கான காணி, வீடுகள், வாழ்வாதாரம், இருப்பிடத்தை உறுதிப்படுத்த வேண்டும், அந்த புலம் பெயர்ந்த மக்களை மீளக் கொண்டு வந்து குடியேற்றுவதற்கான சட்டதிட்டம் நிறைய இருக்கிறது இவ்வாறு பல பிரச்சனை இருக்கிறது
இவ்வாறான நிலையில் இரண்டு நாட்டு அரசாங்கங்களுடன் கலந்து உரையாடாமல் எவ்வாறு பணம் வசூலிப்பீர்கள் எனவே பணம் வசூலிப்பதை உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மாத்திரம் அல்ல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.;
இந்த அகதிகளை மீளக் குடியேற்றுவது தொடர்பில் நாங்கள் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் உட்பட ஒரு குழுவை ஏற்படுத்தி ஆலோசனைகளை பெற்று முன்னெடுத்துக் கொண்டு வருகிறோம். என்பதுடன் அடுத்த மாதம் என்னுடன் குழு ஒன்று இந்தியாவுக்கு பயணமாகிறது அங்கு அனைத்து அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு அவர்களின் விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொண்ட பின்னர் இலங்கை அரசுடன் இந்திய அரசுடன் பேசமுடியும்.
எனவே இந்தியாவில் உள்ள அகதிகளை மீள கொண்டு வந்து குடியேற்றுவது தொடர்பாக எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பு என்னுடன் தொடர்பு கொள்ளவும்.
அதேவேளை ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கை வாழ் மக்களின் இலங்கை கடவுச்சீட்டு காலாவதியான மற்றும் புதிய பாஸ் போட்டுக்களை பெறுவதற்காக அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு சென்று பாஸ்போட்டை புதிப்பித்து பெற்றுக் கொள்ள குறைந்தது 6 மாதம் தொடக்கம் 2 வருட காலம் நீடிக்கின்றனர்.
அது மட்டுமல்ல அதற்கான கட்டணங்கள் அதிகரிக்கின்றது இதனால் அவசர தேவைக்காக அந்த மக்கள் இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர் எனவே இந்த ஆட்சி காலத்தில் இப்படியான செயல்பாடு வரவேற்கதக்கது அல்ல.
இந்த நாட்டுக்கு நல்ல ஒரு ஜனாதிபதி கிடைத்திருக்கிறார் அவர் ஒரு புனிதமான பயணம் மேற்கொண்டு வருகின்றார் இந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு கொஞ்ச தேரர்கள் உண்ணாவிரதம் இருப்பது மட்டுமல்ல அவருக்கு பொம்மை ஒன்றை ஓடவைத்து சூனியம் செய்கின்றனர் இது அனைத்து எதிர் கட்சிகளின் சதி
இந்த எதிர்க்கட்சி யார் என்றால் கொள்ளையடித்து, கொலை செய்து, சிறுநீரகத்தை விற்று, கண்ணை பிடுங்கி விற்று, சடலங்களை முதலைக்கு உணவாக போட்ட இந்த கூட்டம் தான் இந்த சதி எனவே எந்த சூனியமே சதியே ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க விடம் பலிக்காது இன்னும் 20 வருடம் அலர் ஆட்சி செய்வார் எனவே இந்த சிறுபிள்ளை தனமான செயலை விட்டுவிட்டு அவருடன் ஒன்றினைந்து பயணித்தால் 10 வருடத்தில் இலங்கையை சிங்கப்பூர் போல கொண்டு வரலாம்.
ஜனாதிபதி ஆட்சியை பொறுப்பேற்றதும் நாட்டை சூறையாடிய கள்வர் கூட்டம் சிறையில் அடைக்கப்பட்டனர் இவர்களுடன் தொடர்புபட்டவர்கள் சங்கிலி கோர்வை மாதிரி பின்னால் இருக்கின்றனர் இது சிங்கள பகுதியில் நடக்கின்றது இந்த கைதுகள் வடக்கு கிழக்கில் 3 மாதத்தில் வந்துவிடும் எனவே அடித்த கொள்ளைகள், கொலைகள், சுத்துமாத்து எல்லா பட்டியல் வைத்திருக்கின்றனர் ஆகவே சிறைக்கு போவதற்கு பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு தயாராகுங்கள்
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடந்த தேர்தலின் போது 60 கோடி வாங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அரசாங்கம் விசாரணை ஒன்றை மேற்கொண்டு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

Post A Comment:
0 comments so far,add yours