மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை புதிய கல்விப் பணியகத்தின் செயலாற்றுப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் (Board of Directors – Eastern Province) திரு. ரி. அருள்ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர வழங்கியுள்ளார்.
01.10.2026 அன்று மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் தனது புதிய பதவிக்கான கடமைகளை திரு. அருள்ராஜா பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த திரு. அருள்ராஜா, ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours