'



இன்று உருவாகியுள்ள சூறாவளிக்கு இந்திய நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட முரசு என்னும் பெயர் சூட்டப்படவில்லை. மாறாக பங்களாதேஷ் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட அர்ணாப் எனும் பெயர் சூட்டப்பட்டது. இதற்குப் பின்னராக ஏதாவது சூறாவளி உருவாகினால் அதற்கு முரசு என பெயர் சூட்டப்படும்.*


நேற்றைய (25.10.2026) தினம் கிழக்கு-மத்திய மற்றும் அதனை சூழவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது கடந்த 06 மாதத்தியாலத்தில் மணிக்கு 15 கிலோ மீற்றர் எனும் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை கிழக்கு-மத்திய மற்றும் மேற்கு-மத்திய கடல் பிராந்தியக்கங்களுக்கு மேலாக ஒரு சூறாவளியாக (Cyclonic Storm) வலுவடைந்து உள்ளது.


இது தற்போது Gopalpur (Odisha) இருந்து தென் கிழக்காக 580 தூரத்திலும்,

Sri Vijaya Puram (Andhra Pradesh) இருந்து வடமேற்காக 620km தூரத்திலும், 

Visakhapatnam (Andhra Pradesh) இருந்து கிழக்கு-தென்கிழக்காக 610km தூரத்திலும், 

Kakinada (Andhra Pradesh) இருந்து கிழக்கு தென்கிழக்காக 690km தூரத்திலும்,

Machilipatnam (Andhra Pradesh) இருந்து கிழக்கு- தென்கிழக்காக 720km  தூரத்திலும், 

Bapatla (Andhra Pradesh) இருந்து கிழக்கு-தென்கிழக்காக 860km தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.



பின்னர் இது மேற்கு-வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, ஒரு தீவிர புயலாக (Severe Cyclonic Storm) மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நாளை (27.10.2026) வலுவடையும்.


அதன்பின்னர் இது வடமேற்கு திசையில் நகர்ந்து அதி தீவிர புயலாக வலுவடைந்து (Very Severe Cyclonic Storm) மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஆந்திர பிரதேச கரையோரத்தை 28ஆம் திகதி காலையில் சென்றடையும்.


இது பின்னர் ஆந்திர பிரதேசத்துக்கும் ஞானம் (Yanam) கரையோரத்திற்கும் இடையில் Bapatla இற்கும் Visakhapatnam இற்கும் இடையில் ஒரு தீவிர புயலாக ஊடகத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த சந்தர்ப்பத்தில் வீசும் காற்றின் வேகமானது 125km  முதல் 125km வரை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours