இந்த தாழமுக்கத்தின் உருவாக்கம் பற்றி இன்று இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களமும்,
இந்திய வானிலை ஆராய்ச்சி திணைக்களமும் உறுதிப்படுத்தி உள்ளன.
இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்திய நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட "முரசு"எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை சூழவுள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு மேலாக இன்று (31.10.2026) காலை காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்கமானது (Well-marked low pressure area),
இன்று மாலை ஒரு தாழமுக்கமாக (Depression) மேலும் வலுவடைந்து உள்ளது.
இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (01.11.2026) மதியம் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும், அதனை சுற்றியுள்ள தென்மேற்கு, மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிரந்தியத்திற்கு மேலாக ஒரு சூறாவளியாக மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது நாளை மறுதினம் (02.11.2026) மாலை ஆந்திர பிரதேசம் மற்றும் அதனை சூழ உள்ள மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
*மீண்டும் ஒரு காற்று சுழற்சி* எதிர்வரும் 06ஆம் திகதியளவில் வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகி இலங்கைக்கு சற்று அண்மையாக வர இருப்பதன் காரணத்தினால் எதிர் வருகின்ற 06ஆம் திகதி முதல் அல்லது 06ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சில நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பாக வரும் நாட்களில் விரிவாக அறிவிக்கின்றேன்.

Post A Comment:
0 comments so far,add yours