Articles by "நேர்காணல்"
Showing posts with label நேர்காணல். Show all posts

 



போராட்டம் ஒன்றை எப்படி எந்தச் சந்தர்ப்பத்தில் ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க தேவையில்லை என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


கேள்வி-தற்கால அரசியல் நிலைமை தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்-கோட்டாபய ராஜபக்ச 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது சிங்கள மக்களிடம் இருந்த எதிர்பார்ப்பு அடுத்த ஒரு ஆண்டுகளிலேயே குறைவடைய ஆரம்பித்துள்ளது. அதேபோன்று கடந்த ஆண்டு  ஓகஸ்ட் மாதம் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்றபோது, அரசாங்கத்தின் செல்வாக்கு உயருவது போன்றதொரு தோற்றப்பாடு தெரிந்தது.

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அரசாங்கத்தின் செல்வாக்குக் குறைய ஆரம்பித்ததுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கத்துக்குள் முரண்பாடுகளும் மேலோங்கியது. 69 இலட்சம் சிங்கள மக்களுடைய வாக்குகளில்  கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். இவருடைய ஆட்சி நீடித்து நிலைக்க வாய்ப்பில்லை என்பது முற்போக்கான சிங்கள மக்களுக்கு ஏலவே தெரிந்த ஒன்று. தமிழ் மக்களுக்கும் அது ஏலவே தெரிந்ததுதான்.

கோட்டாபயவுக்கு வாக்களித்த மக்கள்தான் இன்று அவரை வீட்டுக்குப் போ என்று குரல் எழுப்புகின்றனர். மக்கள் வீதிக்கு வரும் நிலைமை உருவாகுமென அரசியல் தெரிந்த பலரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே எதிர்பார்த்திருந்த ஒன்றுதான். ஆகவே ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் மாத்திரமல்ல பொருளாதார நெருக்கடிக்கான மூலத்தை இனிமேலாவது சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


ஏனெனில் கோட்டாபய மாத்திரமல்ல சிங்கள அரசியல்வாதிகள் பலரிடமும் ஊழல்மோசடிக் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆகவே இனரீதியாக வகுக்கப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உரிய காரணம் என்பதை உணர வேண்டும்.  

கேள்வி- அரசாங்கத்திற்கெதிரான சிங்கள மக்களின் போராட்டம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?

பதில்-பொருளாதார நெருக்கடி. விலைவாசி உயர்வுக்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டம் நியாயமானது. அந்தப் போராட்டத்தைத் தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள். ஏனெனில் முப்பது ஆண்டுகால போரும் அதன் பின்னரான 12 வருடங்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் துயரங்கள் என்பது மிகப் பெரியது.


ஆகவே போராட்டம் ஒன்றை எப்படி எந்தச் சந்தர்ப்பத்தில் ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் கோட்டாபயவுக்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டத்தில் தமிழ் மக்கள் நேரடியாக ஆதரவு கொடுக்க வேண்டுமென யாருமே எதிர்ப்பார்க்கக்கூடாது.


ஏனெனில் டீசல், காஸ்,பெற்றோல் விலைகள் குறைவடைந்து அவை வழமைபோன்று இலகுவாகக் கிடைத்துவிட்டால், அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைவடைந்து நிலைமை வழமைக்குத் திரும்பிவிட்டால், தற்போது வீதியில் நின்று போராடும் சிங்கள மக்கள் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். சிங்களவர்களுடைய பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

ஆகவே கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமெனக் கோசமிட்டுப் போராடும் சிங்கள மக்கள் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முதலில் நன்கு அறிந்திருக்க வேண்டும். தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் எழுபது ஆண்டுகளுக்கும் மேலானது.

கேள்வி- தமிழ் தரப்புகளின் மௌனம், அரசாங்கத்திற்கு ஆதரவானதா?

பதில்-தமிழர்கள் மௌனமாக இருக்கவில்லை. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுகளினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கோசமிடும் சிங்கள மக்கள், பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணத்தை அறிய விரும்புகின்றார்களா? கோட்டாபயவின் அதிகாரத் துஸ்பிரயோகம், ஊழல்மோசடி மாத்திரமே விலைவாசி உயர்வுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் காரணமல்ல.

இனரீதியாக வகுக்கப்பட்ட அரசியல் பொருளாதாரத் திட்டங்கள் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம். இதனை வீதியில் நின்று போராடும் சிங்கள மக்கள் துணிவோடு வெளிப்படுத்த வேண்டும்?

முப்பது ஆண்டுகால போருக்குச் செலவிட்ட தொகை பற்றி எந்தவொரு அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் விளக்கம் கோரவில்லை. 2009 இற்குப் பின்னரான சூழலில் வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் நவீனமயப்படுத்தும் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டமை சிங்களக் குடியேற்றங்கள். புத்தர் விகாரை அமைக்கப்பட்டமை புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றமை போன்ற இனரீதியான திட்டங்களுக்குரிய நிதி எங்கிருந்து பெறப்பட்டன? இது பற்றி ஜே.வி.பிகூட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவேயில்லை.

ஆகவே கோட்டாவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மக்கள் மௌனமாக இருப்பதாக யாருமே கூற முடியாது. தமிழ் மக்களுக்கு வலிகள் ஏராளம்.

கேள்வி- விமர்சனத்திற்குள்ளான  சுமந்திரனின் தீப்பந்தப் போராட்டம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?

பதில்-சுமந்திரன் எப்போதுமே தென்பகுதி அரசியலோடு ஒத்துப்போகக்கூடிய நிலைப்பாட்டை எடுத்து வரும் ஒருவர். ஆனாலும் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முடியாது. அவர் தனது கட்சி சார்ந்து தீப்பந்தப் போராட்டத்தை நடத்திச் சிங்கள மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தப் போராட்டத்தின்போது வடக்குக் கிழக்கு மக்களின் அரசியல். பொருளாதார நியாயப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

குறிப்பாகச் சிங்கள மக்கள் தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி உயர்வுகள் தமிழ் மக்களுக்குப் போர்க்காலத்தில் பரீட்சயமானவை என்று கூறியிருக்க வேண்டும். 1999களில் ஒரு லீற்றர் பெற்றோல் ஆயிரத்து 500 ரூபாவுக்கும் அதற்குக் கூடுதலான விலைகளுக்கும் வடக்குக் கிழக்கில் விற்பனை செய்யப்பட்டன.

2014 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் எரிபொருட்களின் விலைகள் கொழும்பு விலையைவிடக் கூடுதலாகவே விற்பனை செய்யப்பட்டன. ஆகவே இந்த நிலைமைகள் பற்றி எடுத்துக் கூறியிருக்க வேண்டும்.

கேள்வி- மக்களிடம் ஆட்சியை ஒப்படைக்க கோரும் சிங்கள மக்களின் கோரிக்கை நியாயமானதா?

பதில்-இது நல்ல கேள்வி ஆட்சியைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோர மக்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஏனெனில் இலங்கை அரசு என்ற கட்டமைப்பு மக்களினாலேயே தோற்றுவிக்கப்பட்டது. ஆகவே ஆட்சியை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென மக்கள் கோருவதன் அர்த்தம் என்னவென்றால், இலங்கையின் தற்போதைய அரச கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்பதே.

ஆகவே தமிழ் முஸ்லிம் மக்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்குரிய புதிய அரச கட்டமைப்பை உருவாக்க சிங்கள மக்கள் ஒன்றுபட்டால், தமிழ் மக்கள் நிச்சயமாக முழுமையான ஆதரவு கொடுப்பார்கள்.

தமிழர்களின் அதிகாரப் பங்கீட்டுக்கான கோரிக்கை இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே தோன்றியது. அதற்காக முப்பது வருட அகிம்சைப் போராட்டமும் அடுத்த முப்பது வருட ஆயுதப் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் புவிசார் அரசியல் போட்டிக்குள் ஈழவிடுதலைப் போராட்டமும் இல்லாதொழிக்கப்பட்டது.

தற்போது கோட்டா வீட்டுக்குப் போ என்று போராடும் சிங்கள மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு இனரீதியான அரசியல், பொருளாதாரத் திட்டங்கள்தான் மூல காரணம் என்பதை உணர்ந்து, இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பின் அதிகாரமுறைமைகளை மாற்ற முற்பட்டால் நிச்சயமாக இலங்கைத்தீவில் அரசியல் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும்.

கேள்வி- தமிழ் மக்கள் எந்த ஆர்வமுமின்றி இருக்கின்றார்கள்,அது அரசாங்கத்திற்கு ஆதரவானதா?

அரசாங்கத்திற்கு ஆதரவு என்பதல்ல. தமிழ் மக்களைப் பொறுத்தவரை கொழும்பில் எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும், ஒன்றுதான். காஸ். டீசல் கிடைத்துவிட்டால் சிங்கள மக்கள் போராட்டத்தை நிறுத்திவிடுவார்கள். ஆனால் தமிழர்களின் போராட்டம் தொடர்ச்சியானது. சிங்கள மக்கள் உண்மையைத் தெரிந்து கொண்டு முழுமையான அதிகாரப் பங்கீட்டு மாற்றத்துக்கு ஒன்றுதிரள வேண்டும்.

சிங்கள அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மாறி மாறி ஆட்சியமைத்தபோது போரைத் தொடர்ச்சியாக முன்னெடுத்தன. அதற்காகச் சிங்கள மக்களுக்கு இனவாத கருத்துக்களையும் தேர்தல் காலங்களில் விதைத்தார்கள். அது பிழையான பாதை என்பதைத்தான் தற்போதைய பொருளாதார நெருக்கடியும், விலைவாசி உயர்வும் சிங்கள மக்களுக்கு உணர்த்தி நிற்க்கின்றன.

கேள்வி- அரசு மற்றும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு?

பதில்-நிலையான அரசியல் தீர்வு முன்வைக்கப்படாதவரை தமிழ் மக்கள் எந்தவொரு அரசாங்கத்தையும் அதன் அமைச்சரவைiயும் ஏற்க மாட்டார்கள். வெறுமனே அரசியல் நோக்கிலான அபிவிருத்தி வேலைத் திட்டங்களே வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ் மக்களுக்கு எது சரி எது பிழையென எல்லாமே விளங்குகின்றது. ராஜபக்சவின் அரசாங்கம் இனவாதத்தை மூலதனமாக்கிப் பிழையான வழியில் ஆட்சி அமைத்துள்ளது என்பதைத் தற்போதுதான் சிங்கள மக்களும் உணருகின்றனர்.


ஆகவே தற்போதைய நெருக்கடியான சூழலில், தமது அதிகாரத்தைத் தொடந்தும் தக்கவைப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தால் ஒட்டுமொத்த இலங்கைத்தீவுக்கே பயனில்லை என்றார்.
.


இலங்கைக்கு முதல் தடவையாக விஜயம் செய்துள்ளேன். இலங்கை இயற்கைஎழில்மிகுந்த வளமான நாடு. கனிவான மக்கள்.நல்ல விருந்தோம்பல் பண்பு. இலங்கையை எனக்கு நன்கு பிடித்துள்ளது. எனது பூர்வீகம் இலங்கைதான்.அதுவும் நாவிதன்வெளி. எனது பாட்டனார் ராஜசிங்கம் அதிபராயிருந்து படிப்பித்த பாடசாலைக்கு இன்னும் உதவுவோம். மக்களுக்கும் நிறைய உதவுவோம்.

இவ்வாறு கூறுகிறார் ஜக்கிய இராச்சியத்தின் சர்வதேசஅழகி (Miss International UJ  -2020-2022)செல்வி இவஞ்சலின் லட்சுமணர் .

ஆசியாவிலிருந்து இந்த உயர்விருதுக்குத் தெரிவான முதல் பெண் இவஞ்சலின். 21வயதேயான இவஞ்சலின் நடிப்பு மற்றும் தொலைக்காட்சி துறையில் கனடாவில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர். லண்டனில் இவங்சலின் பெஷன் லிமிட்டட் (Evanjelin Fashion Ltd)நிறுவனத்தின் ஸ்தாபகராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். சிறந்த ஒரு பரோபகாரி.தமிழ் ஓரளவுதெரிகிறது. லண்டனில் பிறந்துவளர்ந்தவர். அழகியல்துறையில் சிறந்துவிளங்கும் இவர் ரெனிஸ் கூடைப்பந்து கிரிக்கட் காற்பந்து  வலைப்பந்து போன்ற விளையாட்டில் தலைமைத்துவத்தை வகித்து சாம்பியான விருதுபெற்றவர்.


2017-18 வருடத்திற்கா Miss Teen Great Britain  CROWN பெற்றவர்.2016-17இல்  Miss Junior Teen Great Britain  CROWN 1st runnerup பெற்றவர்.லண்டன் பிஷப் சொலனரில் நடைபெற்ற 18வயதுக்குட்பட்ட பெண்களுக்கான காற்பந்தாட்டத்தில் மிட்லண்ட கப்பை வென்றெடுத்தவர். அதேவேளை கிரிக்கட்ட சுற்றுப்போட்டியிலும் மிட்லண்ட கப் (Midland   cup)பெற்றவர்.
எதிர்வரும் அக்டோபரில் யப்பானில் நடைபெறவிருக்கும் உலகஅழகி தெரிவுப்போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் பிரித்தானிய உலகஅழகி இவஞ்சலினை நாவிதன்வெளியில் சந்தித்து பேசிளோம்.


நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில்(தேசியபாடசாலை) அவரால் நிறுவப்பட்ட 10அடி உயர  சரஸ்வதி சிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் திறந்துவைத்தார்.
1970களில் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் அதிபராயிருந்த ராஜசிங்கம் அவர்களின் பேத்தியான இவர் பாரியபிரித்தானியாவின் அழகுராணியாக மூன்று தடவைகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முள்ளாள் அதிபர் ராஜசிங்கத்தின் மகன் ஜீவராஜூ சாந்தி ராஜகருணா தம்பதியினரின் மகளான உலகஅழகுராணி இவஞ்சலின் லண்டனில் பிறந்துவளர்ந்தவர். கிரிக்கட் வலைப்பந்து போன்ற விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாடுகொண்ட அவர் அழகுக்கலையில் முத்திரைபதித்தவர்.
ராஜசிங்கத்தின் குடும்பத்தினர் இப்பிராந்தியத்தில் வசதியில்லாத மக்களுக்கு வடு கட்டிக்கொடுத்தல் பாடசாலைகளுக்கு உதவுதல் போன்ற சமுகசேவைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் ஓரங்கமாக இப்பாடசாலையில் 10அடி உயர சரஸ்வதி சிலை நிறுவ நிதியுதவி நல்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியைச்சேர்ந்த ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேச அழகி செல்வி இவஞ்சலின் லட்சுமணர் இதற்கென இலங்கை வந்திருந்தார். அவருடன் அவரது தாயார் சாந்திராஜகருணாவும் வருகைதந்தனர். இலங்கை சுற்றுலாஅதிகாரசபை அவர்களுக்கான விருந்தினர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளதுடன் கூடவே அதன்பிரதிநிதிகளும் வந்திருந்தனர்.

முன்னதாக அதிதிகள் பாண்ட் வாத்தியம் சகிதம் மாலைசூட்டி பூச்செண்டு வழங்கி கோலாகலமாக வரவேற்கப்பட்டனர்.
பாடசாலை வளாகத்தில் நிறுவப்பட்ட சரஸ்வதித்தாயின் சிலை திறப்புவிழா வித்தியாலய அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சரஸ்வதித்தாயின் சிலையை உலகஅழகுராணி இவஞ்சலின் திறந்துவைக்க சிலைக்கான நினைவுபடிமக்கல்லை அவரது தாயார் சாந்திராஜகருணா திரைநீக்கம் செய்துவைத்தார்.
தமிழ்ப்பாட ஆசிரியை திருமதி ஜெயரஞ்சினி தயாபரன் வரவேற்புரைவழங்க சிரேஸ்டஆசிரியர் நடராஜா கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தித் தொகுத்தளித்தார்.

சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளரும் பாடசாலைஇணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கௌரவஅதிதியாகக்கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பிரதிஅதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் விசேடஉரை நிகழ்த்தினார்.
மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. உலகஅழகி வருகைதந்து அவர் நிருமாணித்த சரஸ்வதி சிலையைத்திறந்துவைத்தமைக்காக உலகஅழகி இவஞ்சலின் அவரது தாயார் சாந்தி ஆகியோருக்கு பாடசாலைச்சமுகம் பொன்னாடை போர்த்துக்கௌரவித்தது.
 உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அவர்களுக்கு நன்றியுடன்கூடிய வாழ்த்துப்பத்திரத்தை வழங்கிவைத்தார்.
பின்னர் உலகஅழகி இவஞ்சலின் 'வணக்கம் நன்றி' எனும்வார்த்தைகளை தமிழில் பேசி உரையை ஆங்கிலத்தில் பேசினார். சகோதாரஇனத்தைச்சேர்ந்த அவரது தாயார் சாந்திராஜகருணா தமிழில் அழகாக உரையாற்றினார். பாடசாலைக்குத் தேவையான மேடை மற்றும் ஒலிபெருக்கி வசதிகளையும் செய்துதருவதாக அவர் உறுதியளித்தார்.உபஅதிபர் பி.ஜெகதீசன் நன்றியுரையாற்றினார். உலகஅழகியின் உறவினரான ஆசிரியை சிவானந்தி ருபனின் விருந்துபசாரமும் இடம்பெற்றது.

விழாவில் உலகஅழகி இவஞ்சலின் பாட்டனார் முன்னாள் அதிபர் ராஜசிங்கத்திற்கு ஆத்மார்த்த அஞ்சலி செலுத்தப்பட்டர். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் அக்டோபரில் யப்பானில் நடைபெறவிருக்கும் உலகஅழகி தெரிவுப்போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் பிரித்தானிய உலகஅழகி இவஞ்சலின் வெற்றிபெறவேண்டி அங்கு இறை பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது.
அதன்பின்னர் அவர்களால் குடியிருப்புமுனையில் நிருமாணிக்கப்பட்ட வீடொன்றினை வசதிகுறைந்த குடும்பமொன்றிற்கு வழங்கிவைத்து அதற்கான தளபாடங்களையும் வழங்கிவைத்தனர்.

உலகஅழகியின் உறவினரான ஆசிரியை சிவானந்தி ருபனின் வீட்டில்வைத்து உலகஅழகியுடன் நேர்முகத்திற்காக சந்தித்தேன். அவருடன் அவரது தாயார் சாந்தி ஜீவராஜூம் உடனிருந்தார்.


கேள்வி: வணக்கம் நீங்கள் இலங்கைக்குவரும் முதல் தடவையா?இலங்கை விஜயம்  எப்படி அமைந்தது?
பதில்: வணக்கம் இதுதான் இலங்கைக்குவரும் முதல் பயணம். எனது அம்மா பிறந்த காலி தொடக்கம் எனது அப்பா பிறந்த நாவிதன்வெளி வரை இதுவரை இரண்டரை வார காலபயணத்தில் சுகமான அனுபவம் பெற்றேன். நாளை யாழ்ப்பாணம் சென்று மீண்டும் கொழும்பு செல்லவிருக்கிறேன்.
இலங்கை வளமான நாடு.நல்லமக்கள்.எங்கும் இன்முகத்தோடு வரவேற்கும் நல்ல உள்ளம்கொண்ட மக்கள்.

கேள்வி: கண்டி தலதா மாளிகைக்கும் சென்றதாக அறிகிறோம்..
பதில்: ஆம் அழகான வணக்கஸ்தலம். அங்கு பெருவரவேற்புமளித்தாhர்கள். கண்டியன் சாறி அணிந்து மகிழ்ந்தேன்.

கேள்வி: நாவிதன்வெளியில் உங்களுக்கான வரவேற்பு எப்படி இருந்தது?
பதில்: உச்சக்கட்ட மனம்பிடித்த வரவேற்பு. சரஸ்வதி சிலையை நானும் தாயாரும் திறந்துவைக்க கிடைத்தது ஒரு வரப்பிரசாதம்.நல்ல விருந்தோம்பல். எனது பாட்டனார் ராஜசிங்கம் லட்சுமணர் அதிபராயிருந்து கற்பித்த நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திற்கு என்ன உதவி தேவையென்றாலும் செய்வோம். அங்கு மேடை ஒலிபெருக்கி தேவையென்றார்கள். அதனைச்செய்ய சித்தமாயிருக்கிறோம்.மேலும் உதவிசெய்யக்காத்திருக்கிறோம்.

கேள்வி: பாடசாலைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்ன?
பதில்: நான் உலக அழகியாயிருந்தாலும் எனக்கு கைகொடுத்தது கல்விதான். நான் பெஷன்டிசைன் நவீன வடிவமைப்பு பாடம்தான் படித்தேன்.பின்பு கனடாவில் நடிப்பு மற்றும் தொலைக்காட்சி துறையில் பட்டப்படிப்பை கடந்தவருடம் பூர்த்திசெய்தேன்.அதனால் சிறந்த தொழில்வாய்ப்பு தேடிவருகிறது. எனினும் இறையருளால் இந்த அழகுத்துறையும் எனக்கு வாய்ப்பளித்துள்ளது.

கேள்வி: தங்களுக்கு எத்தனை வயது? இது இக்கிய இராச்சியத்தில் அழகுராணியாக தெரிவானது முதல் தடவையா?
பதில்: எனக்கு 21வயது.கடந்த 3தடவைகள் இந்த கிரீடத்தைசூடியுள்ளேன்.2020-21க்காக நான் இறுதியாக 56போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முதல் ஆசியப்பெண்ணாகத் தெரிவானேன். அது சந்தோசமாகவிருக்கிறது. கொவிட் காரணமாக இவ்வாண்டுக்கும் அதனை நீடித்துள்ளார்கள்.

கேள்வி: இன்னமும் அழகுராணிபோட்டியில் கலந்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா?
பதில்: எதிர்வரும் அக்டோபரில் யப்பானில் நடைபெறவிருக்கும் உலகஅழகி தெரிவுப்போட்டியில் கலந்துகொள்ளவிருக்கிறேன்.

கேள்வி: தங்கள் பொழுதுபோக்கு என்ன?
பதில்:அழகுக்கலை மற்றவர்களுக்கு உதவுதல் ஆடைவடிவமைப்பு கலையிலீடுபடுதலும் பயணித்தலும்

கேள்வி: நீங்கள் ஒரு சிறந்த பரோபகாரி என அறிகிறோம்? அந்த சிந்தனைபண்பு எப்படி வந்தது.?
பதில். அந்தப்பண்பு எனது அம்மாவிடமிருந்துவந்தது. 2014இல் 60ஆயிரம் டொலர்களுக்கு மேல் நிதிச்சேகரிப்புசெய்து எண்ணற்ற தானதருமங்களைச் செய்தோம். Together for Short lives  Christie Charity  செயற்றிட்ஙகளினூடக மக்களுக்கு உதவியுள்ளோம்.
E.Francia Foundation ஜ ஆரம்பித்து சுயஉதவி செய்துவந்தேன்.
கேள்சி : தங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

பதில்: இறைவன் என்னைப்படைத்தது மக்களுக்கு உதவிசெய்வதற்காக. எனவே முடிந்தளவு சமுகசேவை செய்யக்காத்திருக்கிறேன்.

நேர்காணல்: வி.ரி.சகாதேவராஜா  காரைதீவு நிருபர்

 (திருக்கோவில் எஸ்.கார்த்திகேசு)

பெண்களின் அரசியல் பிரவேச
ம் காலத்தின் தேவை,கலாசாரம் ஓரு தடையல்ல வீட்டுக்குள் முடங்கியிருப்பது மடமை. 

-நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் வஸிறா நூர் மொஹமட்டுடனான நேர்காணல் தெரிவிப்பு-

அம்பாறைமாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் முதலாம் கிராமசேவையாளர் பிரிவில் தனதுபிரிவுசிறார்களின் கல்விவளர்ச்சிக்குஉதவும் வகையில் சொந்தகாணியில் முன்பள்ளி ஒன்றினை அமைத்து அதனூடாககற்பித்தல் பணியினை ஆரம்பித்துகல்விப் பணியுடன் சமுகப் பணியினையும் முன்னெடுத்துவந்தநிலையில் தேசியப் பட்டியல் ஊடாகநிந்தவூர் பிரதேசசபையின் உறுப்பினராகதேசியமக்கள் காங்கிரஸ் கட்சியின் ஊடாகநியமிக்கப்பட்டுள்ளநிந்தவூர் பிரதேச சபை உறுப்பினரானதிருமதி ஹஜியாணிவசீரா நூர் மொஹமட்  அவர்களுடனான சமூகஅரசியல் பயணங்கள் தொடர்பான நேர்காணல்.


உங்கள் குடும்பபின்னணிகள் பற்றும் கூறுங்கள்

நான் நிந்தவூர் பிரதேசத்தில் 1967ஆம் ஆண்டுமுகமது அலியார் ஆதம்பாவாசெய்னன்பு தம்பதிகளுக்கு ஏழாவது மகளாவேன். எனதுஆரம்பகல்வியைநிந்தவூர் அல் கசாலியாவித்தியாலயம் (தோட்டத்துப் பாடசாலை) இடைநிலைக் கல்வியை நிந்தவூர் அல் அஷ்ரப் தேசியப் மத்திய கல்லூரியிலும் தரம் 12 வரை பயின்று இருந்தேன். தொடர்ந்துஎனதுகல்வினைதொடரமுடியாதுவறுமையின் காரணமாககல்வியை இடைநிறுத்திவிட்டு  17வயதில் வெளிநாட்டுக்கு தொழில் நிமிர்த்தம் சென்று இருந்தேன். 

நான் கல்வியை தொடர முடியாத நிலமையைக் கண்டு மனம் வேதனை அடைந்த மனதுடன் தான் வெளிநாடுசென்று இருந்தேன் இதன் காரணமாகநான் வறியமாணவர்களுக்கு கல்விகற்பதற்கு உதவி புரியவேண்டும் என்ற மனஆதங்கத்தோடு 1991ஆம் ஆண்டு எனது சொந்த காணியில் முன்பள்ளி பாடசாலை ஒன்றினை அமைத்து கல்விச் சேவையை மேற்கொண்டுவருகின்றசந்தர்ப்பத்தில் 1994ஆம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் நான் எனது முன்பள்ளிஆசிரியர் பணியை நிறுத்திவிட்டு குடும்பபணிகளில் வீட்டில் இருந்தேன். பின்னர் எனது கணவர் 2012ம் ஆண்டு மரணித்ததைத் தொடர்ந்து 2016 ஆண்டுமுதல் மீண்டும் சுவாட் நிறுவனத்தின் ஊடாக சமூகப் பணிகளில் என்னைமுழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருந்தவேளையில் இன்று அரசியலிலும் எனது பணியை முன்னெடுக்க இறைவன் நாடியுள்ளமையும் மகிழ்ச்சியே.

உங்களுடையசமூகஅரசியல் பிரவேசத்தில் குடும்ப உறவுகளின் ஆதரவுகள் எவ்வாறு உள்ளது?

நான் திருமணமானபின்னர் கணவர் மற்றும் குடும்பஉறவுகளின் ஊடாகஎனது முன்பள்ளிகல்விச் சேவைக்கு ஆதரவுகள் கிடைக்கப்பெற்று இருந்தன. ஆனால் அந்தகாலத்தில் நான் அரசியலில் ஈடுபடவில்லை அந்தவிரும்பமும் என்னிடம் இருக்கவில்லை. 2016ஆம் ஆண்டு சுவாட் நிறுவனத்தில் இணைந்து கொண்டதைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் பேணும் வேலைத்திட்டத்தின் கீழ் எனக்கு பணிசெய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் காரணமாக நான் சமூகத்தில் அறிமுகமாகி இருந்தேன். இதனைத் கவனத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிதலைமைப் பீடம் பெண் பிரநிநிதித்துவம் உள்வாங்கப்படவேண்டும் என்றநிலையில் நிந்தவூர் பிரதேசசபைக்கு நான் தேசியப்பட்டியல் உறுப்பினராக இரண்டாம் வட்டாரத்தில் இருந்து நியமிக்கப்பட்டு இருந்தேன். 


உங்கள் சமூகசேவைகள் பற்றி கூறமுடியுமா?

நான் எனது உயர்தரக் கல்வியை முதலாம் ஆண்டு பயின்று கொண்டு இருந்த நிலையில் எனது குடும்ப வறுமை என்னை கல்வியைதொடரவிடாது இந்த இளம் வயதில் வெளிநாடுசென்று இருந்தேன். இது எனது மனதில் வேதனையாக இருந்ததுடன் என்னால் கல்வி கற்க முடியாது போனதைப் போன்று வறுமை கல்விக்குதடையாக இருக்ககூடாது அதற்காக என்னால் முடிந்தளவுகல்விப் பணிக்கு உதவவேண்டும் எனசிந்தித்தேன் அதன் முதற்படியாக வெளிநாடு இருந்துவந்து 1991ஆம் ஆண்டுஆரம்பித்து. நிந்தவூர் முதலாம் பிரிவில் சிறார்களுக்கான முன்பள்ளிக் கல்வியினை இலாபநோக்கமன்றி கற்பித்துவந்தேன். இதுதான் எனதுசமூகப் பணியின் ஆரம்பம் ஆகும்.

இந்நிலையில் எனது கணவரின் மரணத்தை தொடர்ந்தும் குடும்ப பொறுப்புக்கள் குறைந்த நிலையில் எனது தனிமை என்னை மீண்டும் சமூகசேவைகளில் முழு நேரமாகசெயற்படத் இறைவன் நாடியதன் காரணமாக நான் தற்போதும் அரசியல் ஊடாக சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றறேன். எனது சேவைகள் பெரும்பாலும் கல்வியை ஊக்குவிப்பதும் பெண்களை இலக்காகக் கொண்டே பொருளாதாரமேம்பாடுமற்றும் பெண்களுக்குஎதிரானகுடும்பவன்முறைகள் இடம்பெறாதுதடுத்தல் ஆலோசனைகள் வழங்குதல் போன்றபணிகளைமுன்னெடுத்துவருகின்றேன்.

நீங்கள் எவ்வாறுஅரசியலுக்குள் வந்தீர்கள்?

நான் அரசியலில் ஈடுபடும் சிந்தனை இருக்கவில்லை. ஆரசியலை நோக்காக் கொண்டுசமூகம் சார்ந்தபணிகளையும் முன்னெடுத்து இருந்ததும் இல்லை.இலங்கை அரசியலில் பெண்களின் பங்குபற்றுதல் மிகமிககுறைவாக இருந்துவருகின்றநிலையில் அரசினால் கட்டாயம் பெண்களின் பிரநிதித்தவம் 25வீதம் உள்வாங்கப்படவேண்டும் என்றநிலையப்பாடுஅரசியல் கட்சிகளுக்கு இருந்தன.இந்நிலையில் என்னைநிந்தவூர் இரண்டாம் வட்டாத்தில் இருந்துஅகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சிதலைமைகள் தேசியப்பட்டியல் உறுப்பினராக 2018ஆண்டு தெரிவுசெய்து இருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்துநான் நிந்தவூர் பிரதேசசபையின் உறுப்பினராக செயற்பட்டுவருவதுடன் இங்குவந்தபின்னர் தான்; பெண்களின் அரசியல் தேவைப்பாட்டினை புரிந்து கொண்டேன் பிரதேசத்தில் முன்மாதிரியான பெண்னாக எனது சமூகபணிகளுடன் அரசியல் பயணத்தை முன்னெடுத்துவருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். எனது இந்தசமூகஅரசியல் பயணத்தில் பெண்களின் பங்கும் மிக காத்திரமானதாக அமைந்திருக்கின்றமை விசேடமாக கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் மேற்கொண்டசமூகமற்றும் அரசியல் பணிகள் பற்றி கூறமுடியுமா?

நான் ஆரம்பத்தில் எனது சிந்தனை கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்து கல்விகற்பதற்கு வசதியற்றமாணவர்களுக்கான முடிந்தளவு உதவிகள் செய்யவேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தன. அதன்பொருட்டு முன்பள்ளிபாடசாலையை ஆரம்பித்து பாலர்களுக்கு கல்வியை கற்பித்து கொடுத்திருந்தேன். அதனைத் தொடர்ந்துசுவாட் நிறுவனத்தின் இணைந்து மகளீர் சங்கங்கள் ஆகியவற்றின் ஊடாகபல்வேறு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுத்து இருந்தேன். முதியோர்களுக்கான நலன்புரி பணிகளுக்கும் உதவிகள் மேற்கொண்டு இருந்தேன். தற்போது பிரதேச சபையின் நிதி உதவியுடன் வாழ்வாதார உதவிகள் வழங்கி பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதற்காக உந்துசக்தியாகவும் நான் செயற்பட்டுவருகின்றேன்.

உங்கள் எதிர்கால இலக்கு இலட்சியங்கள் பற்றி கூற முடியுமா?

முஸ்லிம் பெண்கள் அரசியிலில் ஈடுபடுவது சமூகநெறி முறைகளுக்கு முரணான செயற்பாடுகள் என பலபெண்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இது ஒரு தவறானபார்வையாகும். முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது எனயாரும் கூறவில்லை. ஆனால் முஸ்லிம் கலாசார நெறிமுறைகளைப் பின்பற்றி நேர்மையாக சமூகமாற்றத்தினைஏற்படுத்தும் வகையில் பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும் 

பெண்கள் தங்களின் பால் நிலைசமத்துவம் நிலையில் சமூக அரசியல் பொருளாதார நிருவாக ரீதியாக ஒருநிலையான இடத்தினைஉருவாக்கிக் கொள்ள முன்வரவேண்டும்.நான் மட்டுமன்றி எனது பிரதேச பெண்கள் உரிமைரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வலுப்பெற்று பெண்களுக்குள் மறைந்து இருக்கும் திறமைகள் ஆற்றல்கள் ஒருவட்டத்திற்குள் முடங்கி இருக்காது அவைகள் வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்பதே எனது இலக்காக இருக்கிறது. இதனை எதிர்வரும் காலங்களில் ஒருஅமைப்புரீதியாக முன்னெடுக்கவும் நான் உத்தேசித்து இருக்கின்றேன்.


 நேர்காணல்  -(திருக்கோவில் நிருபர் எஸ்.கார்த்திகேசு)


பெண்கள் அரசியலில் ஈடுபடுவதன் ஊடாகவே தங்கள் பக்க நியாயங்களை முழுமையாக வெற்றி கொள்ளமுடியும்

-பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.டி.சாபுறாஉம்மாவுடனான நேர்காணளில் தெரிவிப்பு-

அம்பாறைமாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் பொத்துவில் 7 எனும் கிராமசேவையாளர் பிரிவில் இருந்துசமூகம் அரசியல் ஊடாகபெண்களுக்குமுன்மாதிரியாகசெயற்பட்டுபெண்களின் தேவைகளைநன்கு அறிந்து பெண்களுக்கான சேவைகளை முன்னெடுத்துவருகின்ற பொத்துவில் பிரதேசசபையின் தேசிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியபட்டியல் உறுப்பினரான எஸ்.டி.சாயுறாஉம்மாவுடனான சமூக அரசியல் பயணங்கள் தொடர்பான நேர்காணல்.

வினா– 01

உங்களைப் பற்றியும் குடும்பபின்னணிகள் பற்றி கூறுங்கள்

நான் பொத்துவில் பிரதேசத்தில் 1968ஆம் ஆண்டுசரிபுத்தம்பிநாகூர் உம்மாதம்பதிகளுக்குமுன்றாவதுமகளாவேன். எனதுஆரம்பகல்வியைபொத்துவில் அலிர்பான் பாடசாலையில் ஆரம்பகல்வியையும் இடைநிலைக் கல்வியைபொத்துவில் தேசியமத்தியகல்லூரியிலும் பயின்று இருந்தேன்.பொத்துவில் 7 கிராமசேவையாளர் பிரிவில் எனது சேவையை மேற்கொண்டு வருகின்றேன்.எனது பாடசாலைக்காலம் முதல் பொதுப்பணிகளில் ஈடுபடுவதுஎன்பது எனக்குமிகவும் பிடித்தமான ஒருசெயலாக இருந்துவருகின்றன.

வினா– 02

உங்களுடையசமூகஅரசியல் பிரவேசத்தில் குடும்பஉறவுகளின் ஆதரவுகள் எவ்வாறுஉள்ளது?

எனது பெற்றோர்கள் எனது சமூகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளித்துவந்திருந்தனர்.திருமணத்தின் பின் கணவர் மற்றும் பிள்ளைகளின் ஆதரவுகள் மிகவும் என்னை ஊக்கப்படுத்தும் விதமாகவே இன்றுவரை இருந்துவருகின்றன.இதன் காரணமாகவே என்னால் இறைவனின் துணையுடன் பலசவால்களுக்கு மத்தியில் சமூகமற்றும் அரசியல் ரீதியாக செயற்படவும் அந்தபணிகளின் முழு திருப்திகரமானவெற்றியையும் பெற்றுக் கொண்டுஎன்னால் பயணிக்ககூடியதாக இருக்கின்றன.



வினா– 03

நீங்கள் சமூகசேவைக்குள் எவ்வாறு உள்ளீர்க்கப்பட்டீர்கள் என்பதனை கூறமுடியுமா?

நான் முதல் முதலாக 1988.12.01 ஆம் திகதி சனசக்திதிட்டத்தின் கிராம மட்டஅமைப்பில் எனது இருபதாவது வயதில் ஒருஅங்கத்தவராக இணைந்து கொண்டேன். அந்த அமைப்பின் 50 நபர்கள் இணைந்துகொண்ட ஒரு சங்கமாக செயற்பட்டுவந்தது.

அந்தசங்கத்தின் ஊடாகசிரமதானப் பணிகள் பொது நிகழ்வுகளை நடாத்துதல் மற்றும் வறியகுடும்பங்களுக்குஉதவிகள் வழங்குதல் போன்றபணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன. இது என் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்ததுடன் தொடர்ந்தும் நான் சமூகசேவைகளில் முழு நேரமாக செயற்படத் தொடங்கியதுடன் தற்போதும் சமுகப் பணிகளை முன்னெடுத்துவருகின்றேன். எனது சேவைகளை பெரும்பாலும் பெண்களை இலக்காகக் கொண்டேமுன்னெடுத்துவருகின்றேன்.

வினா– 04

சமூகசேவையில் ஈடுபட்டுவந்த உங்களுக்கு எவ்வாறு அரசியல் பிரவேசம் ஏற்பட்டது?

நான் பொத்துவில் பிரதேச செயலகத்தின் பெண்கள் மகளீர் பிரிவின் கிராம மட்டமகளீர் சங்க தலைவியாக இருந்து பெண்களின் பிரச்சினைகள் உரிமைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுவேலைத் திட்டங்களை முன்னெடுத்து வந்தேன். அவ்வாறு நான் பெண்கள் சார்ந்த பணிகளை முன்னெடுத்துவரும் நிலையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் நான் உட்பட மூன்று பெண்களின் பெயர்களை தெரிவுசெய்து பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அனுப்பிவைத்திருந்தார்கள். இந்நிலையில் நான் 2018ல் தேசிய முஸ்லிம் காங்கரஸ் கட்சியில் போட்டியிட்டு சுமார் 800 வாக்குகளுக்கு மேல் பெற்ற நிலையில் கட்சியின் தேசியபட்டியலில் எனக்கு ஆசனம் வழங்கப்பட்டு தற்போது பொத்துவில் பிரதேசசபையின் உறுப்பினராக செயற்பட்டுவருகின்றேன்.

வினா- 05

சமூகமற்றும் அரசியல் சேவையில் பெண்களின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளன?

இலங்கை அரசியலில் பெண்களின் பங்குபற்றுதல் மிகமிகக் குறைவாக இருந்துவருகின்ற நிலையில் அரசினால் கட்டாயம் பெண்களின் பிரதிநிதித்தவம் 25 வீதம் உள்வாங்கப் படவேண்டும் என்ற நிலைப்பாடு என்பது மிகவும் வரவேற்கக் கூடியதாக இருக்கின்றன.இதனைபயன்படுத்திக் கொண்டு பெண்கள் அரசியலில் பங்குதாரர்களாக மாறிதங்கள் பக்கநியாயங்கள்,உரிமைகள் மற்றும் அபிவிருத்திகள் போன்றவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இதனைக் கருத்தில் கொண்டே பொத்துவில் பிரதேசத்தில் முன்மாதிரியான பெண்ணாக எனது சமூகபணிகளுடன் அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருவதில் மகிழ்ச்ச pஅடைகின்றேன். எனது இந்தச மூகஅரசியல் பயணத்தில் பெண்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானதாக அமைந்திருப்பதும் எனது பயணத்தின் வெற்றிக்கு வலுச்சேர்த்துவருகின்றன.

பொத்துவில் பிரதேசத்தில் நான் மேற்கொண்டுவரும் சமூகமற்றும் அரசியல் ஊடான பணிகளுக்கு அங்கிகாரம் வழங்கும் வகையில் பல சமூகசேவைகள் அமைப்புக்கள் பிரதேச விளையாட்டுக் கழகங்கள் போன்றன எனக்கு பொன்னாடைகள் போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவித்து உள்ளமையும் எனது பணிக்குகிடைத்த அங்கீகாரம் என நான் மகிழ்ச்சிஅடைகின்றேன்.


வினா– 06

நீங்கள் மேற்கொண்ட சமூகமற்றும் அரசியல் பணிகள் பற்றி கூறமுடியுமா?

நான் ஆரம்பத்தில் சனசக்தி அமைப்பிலும் அதனைத் தொடர்ந்து சமூர்த்திமற்றும் மகளீர் சங்கங்கள் ஆகியவற்றின் ஊடாக பல்வேறு அபிவிருத்தி வேலைளை முன்னெடுத்து வந்திருக்கின்றேன். குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையிலான பணிகளை முன்னெடுத்து வந்துள்ளேன். இந்தவகையில் 37 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் பெற்றுக் கொடுத்துள்ளேன். மற்றும் 100 பெண்களுக்கு சுகாதாரமானகுடி நீரைபெற்றுக் கொள்ளும் நோக்கில் நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

இதே வேளை நான் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் என்றவகையில் எனக்கு ஒதுங்கீடு செய்யப்பட்ட நிதியின் ஊடாக நகர அபிவிருத்திதிட்டத்தின் கீழ் 6 வீதிகள் கொங்றீட் வீதிகளாக புனரமைத்துள்ளதுடன் பாடசாலை,முன்பள்ளி பாடசாலைமற்றும் விளையாட்டுகழகம் என்பனவற்றிற்கும் நிதிகள் ஒதுங்கீடு செய்து அபிவிருத்திகள் மேற்கொண்டுள்ளேன்.

அத்தோடு 110 பெண்களுக்குபொத்துவில் பிரதேச சபையின் நிதி உதவியுடன் வாழ்வாதார உதவிகள் வழங்கி பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதற்காக உந்துசக்தியாகவும் நான் செயற்பட்டுவருகின்றேன். மேலும் இவ்வாண்டுக்கான நிதி ஓதுக்கீட்டில் வீதிபுனரமைப்பு,வீதிவிளக்குகள், 40 வறியகுடும்பங்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் இதரஅபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான திட்டமுன் மொழிவு ஒன்றினையும் பொத்துவில் பிரதேசசபையில் சமர்ப்பித்து இருக்கின்றேன்.




இதுவரை பழகிப்போன மாமூல் அரசியலை விடுத்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி அதனூடாக தூய நேர்மையான அரசியலை நடாத்த ஆசைப்படுகிறேன். அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு நல்கவேண்டும்.


அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 18389  வாக்குகளைப் பெற்றுத்தெரிவான இளம் சட்டத்தரணி மொகமட் முஸர்ரப் முதுநபீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியிலேயுள்ள பொத்துவில் கிராமத்தில் 1983.06.10ஆம் திகதி பிறந்தவர்.

பொத்துவில் கிராமத்தின் முதல் பாராளுமன்ற பிரதிநிதியாக விளங்கியவர் அமரர் எம்.சி.கனகரெத்தினம். இவர் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1977இல் தெரிவானவர். அதன் பின்னர் நியமன எம்.பி. என்ற ரீதியில் எஸ்.எஸ்.பி.மஜீத் மற்றும் எ.அசீஸ் ஆகியோரைக்குறிப்பிடலாம்.

அந்த வரிசையிலே 37வயதான ஒரு இளம் சட்டத்தரணி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளாரென்றால் அது ஊடகவியலாளர் முசர்ரப் ஆவார்.
ஓரு புதுமுகமாக பாராளுமன்றம் செல்லவிருக்கும் சட்டத்தரணி முசர்ரப்பினுடனான செவ்வி இதோஇ

வினா: முதலில் தங்கள் பூர்வீகம்   பற்றிக்கூறுங்கள்.
விடை: நான் பொத்துவிலில் 3சகோதரர்களுடன் 1983.06.10ஆம் திகதி பிறந்தவன். பொத்துவில் அல்இர்பான் வித்தியாலயம் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப இடைநலைக்கல்வியைக்கற்று உயர்கல்வியை மருதமுனை அல்மனால் மத்திய கல்லூரியில் பயின்றவன்.

வினா: தங்கள் சட்டத்துறைப் பிரவேசம் எவ்வாறமைந்தது?
விடை: உயர்தரத்தில் உயிரியல்விஞ்ஞானம் பயின்ற எனக்கு சட்டத்தரணி ஆகவேண்டும் என்ற அவா ஏற்பட்டது. அதன்காரணமாக திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பயின்று சட்டககல்லூரியில் அற்றர்ணி முடித்து சட்டத்தரணியானேன். இன்று நீதிமன்றுக்குச்சென்று வழக்காடும் நிலையிலுள்ளேன்.
வினா: உங்களின் பிரபல்யத்திற்கு காரணமான ஊடகத்துறை பற்றிக்கூறுங்கள்:
விடை: 2006முதல் 2009வரை சுமார் மூன்றரைவருட காலம் நேத்ரா தொலைக்காட்சியிலும் 2009 முதல் 2017வரை வசந்தம் தொலைக்காட்சியிலும் முழுநேர செய்திவாசிப்பாளனாக நிகழ்ச்சித்தயாரிப்பாளனாக என பல்வேறு துறைகளில் ஈடுபட்டேன். அதில் பெற்ற அனுபவங்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியது.

வினா:தங்கள் அரசியல் பிரவேசம் திடுதிப்பென இடம்பெற்றது. அதற்கான காரணம் என்ன?
விடை: இதுவரை பொத்துவில் பிரதேசத்தில் அரசியல்வாதிகளால் எவ்வித மாற்றமும் நிகழவில்லை.பொத்துவிலில் மக்களது வாக்குகளைப்பெறுவதும் பின்னர் தலைமறைவாவதும் வழமை. மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டேவந்துள்ளனர். இந்தநிலையை மாற்றவேண்டும். மக்கள் தொடர்ர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவந்துள்ளமையை மாற்றவேண்டுமானால் ஊடகம் மட்டுமல்ல அரசியல் அதிகாரம் அவசியம் என்பதை உணர்ந்தேன். அதன்வெளிப்பாடே அரசியல்பிரவேசம்.எனவே மாற்றத்திற்காக வாக்களியுங்கள் என்ற சிந்தனையை மையப்படுத்தி இறங்கினேன்.

வினா: அரசியலில் அனுபவமில்லாத நீங்கள் பொத்துவிலில் இருந்து தெரிவாகுவீர்கள் என்ற நம்பிக்கை இருந்ததா?
விடை: நிச்சயமாக. எல்லோரும் பாற்போத்தல் அரசியல் சின்னப்பையன் எனக்கேலி செய்தனர். அல்லாஹ் பெரியவன். எனக்குரியது சிந்தனையும் பேச்சும். ஆனால் அரசியலை நடாத்தியது மக்கள் என்றால் மிகைப்பட்ட கூற்றல்ல. அரசியல் வாதிகள் தொடர்ச்சியாக இந்த மண்ணை ஏமாற்றிவந்தமையை அறிந்து அந்த அரசியல் அதிகாரத்தை நாம்பெறவேண்டும்.அதனூடாக இந்தமண்ணுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யலாம்.மேலதிகமாக அல்லாஹ் நாடினால் இம்மாவட்ட மக்களுக்கு இனமதபேதம் பாராமல் சேவைசெய்யலாம் என்றெண்ணி இத்துறையில் நம்பிக்கையுடனிறங்கினேன். கடந்தமுறை த.தே.கூட்டமைப்பு பெற்றதைப்போல் எமது கட்சிக்கு 40-45ஆயிரம் வாக்குகளும் எனக்கு 17-18ஆயிரம் வாக்குகள் வந்தாலே போதும் என நினைத்து தேர்தலில் நின்றேன். மக்கள் நம்பினார்கள். ஆதவளித்தார்கள். கனவு நனவானது.

வினா: சமகால அரசியல் இனவாதத்தை மையப்படுத்தி நடந்தேறிவருகிறது. பொத்துவில் 3இனமக்களையும் கொண்டது. தாங்கள் எவ்வகையில் ஏனைய இனங்களை பார்க்கிறீர்கள்?
விடை: உண்மையில் நல்லகேள்வி. மூவினமக்களையும் கொண்டது பொத்துவில்.மூவினமும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் இப்பூமியை அரசியல்வாதிகளே அவ்வப்போது பிரிக்கமுற்பட்டார்கள். பொத்துவிலை அரசியல்வாதிகள் இனரீதியாக பிரித்துவைத்தார்கள். பாடசாலைகளை இனரீதியாகப்பிரித்த அவலமும் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள முஸ்லிம் பாடசாலைகள் அக்கரைப்பற்று வலயத்துடனும் தமிழ்ப்பாடசாலைகள் திருக்கோவில் வலயத்துடனும் சிங்களப்பாடசாலைகள் அம்பாறை வலயத்துடனும் பிரிக்கப்பட்டுள்ளது.
இனி அதற்கு சற்றும் இடமளிக்கமாட்டேன்.எனக்கு அனைவரும் வாக்களித்தார்கள். மக்கள் என்னோடு தொடர்ச்சியாக  ஒத்துழைத்தால் பெரும் சமுகமாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.

வினா: இனவாதம்கூர்மைப்படுத்தப்பட்ட  இந்தக்காலத்தில் முஸ்லிமான உங்களுக்கு ஏனைய தமிழ் சிங்கள மக்களும் வாக்களித்தாகக்கூறினீர்கள். அதையிட்டு விளக்கமுடியுமா?
விடை: நல்லகேள்வி. எனக்கு மூவினமக்களும் வாக்களித்தனர். பாணமை சிங்களசகோதரர்தான் முதலில் எனக்கு தேர்தலன்றுகாலை போன் எடுத்து முதன்முதலில் எனக்கு வாக்களித்ததாகச்சொன்னார்.அதேபோன்று கோமாரி ஊறணி தமிழ்ச்சகோதரர்களும் கூறினாhர்கள். எனவேதான் எனது அரசியல் பயணமானது மூவினமக்களையும் ஒற்றுமைப்படுத்தியதாகத்தான் செல்லும்.

வினா: பாராளுமன்ற உறுப்பினருக்கான வரப்பிரசாதங்களை உடம்பிலே சேரவிடமாட்டேன் என அண்மையில் கூறியிருந்தீர்கள். என்ன சொல்ல வருகிறீர்கள்?
விடை: நான் ஒரு எம்.பி போன்று படாடோபமாக வாழமாட்டேன். சமுகத்தோடு இணைந்து மக்களில் ஒருவனாக மக்களோடு இருந்து சேவை செய்யவிரும்புகிறேன். எம்.பிக்குரிய வரப்பிரசாதங்களை  வஞ்சிக்கப்பட்ட கிராமங்களுக்காக பயன்படுத்துவேன்.  ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் முதலாவதாக வாகன பேர்மிட் வரும் அதில் இரண்டு கோடிஇ மூன்று கோடி என்று உழைத்துக் கொள்வார்கள்.  இந்த அரசியலால் ஒரு சதமும் என் உடம்பில் சேர விடமாட்டேன்.   'நான் ஒரு சட்டத்தரணியாக இருக்கிறேன் எனக்கு இருக்கின்ற 'கோட்' போதும் நான் உழைத்து என்னுடைய குடும்பத்தை என்னையும் காப்பாற்றிக் கொள்வேன்.  
என்னுடைய நோக்கம் இந்த சமூகம் வெற்றி பெற வேண்டும் அதற்கான வழியை அல்லாஹகாட்டித் தந்துள்ளான்' -

வினா: இனிமேல் மக்களை பணம்கொடுத்து அரசியல்வாதிகள் ஏமாற்றமுடியாது என்று சொல்கிறீர்களா?
விடை: நிச்சயமாக முடியாது. இந்த தேர்தலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டு இருக்கிறோம் என்றாலும் பணம் பொருட்கள் கொடுத்து மாமூல் அரசியல் செய்த காலம் மலையேறிவிட்டது.
காசுஇ பணம் கொடுத்து பொத்துவில் மக்களை ஏமாற்ற முடியாதுஇ நேர்மையான அரசியலை முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த வெற்றியில் எமது கட்சியின் வேட்பாளர்கள் அனைவரது பங்களிப்பும் உள்ளது.
வினா: மாவட்டத்திலுள்ள காணிப்பிரச்சினைகளைத் தீர்க்க ஏதாவது திட்ம் வைத்துள்ளீர்களா??

விடை: அம்பாரை மாவட்டத்தில் 39 இடங்களில் காணிப்பிரச்சினை உள்ளது. வேகாமம் காணி தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

அதேபோன்று ஏனைய காணிப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் காணி பிரச்சினையை கையாளும் குழுவை இன்று அழைத்து தகவல்களை பெற்றுக் கொண்டேன்.
வினா: வேறு ஏதாவது பிரச்சினைகள் இனங்கண்டுள்ளீர்களா?
விடைஇ ஆம்.பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பதில் ஆள் ஓழுங்கின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

பொத்துவில் பிரதேசத்தில் உள்ள மும்மத பெரியார்களையும் சந்தித்து மத நல்லிணக்கத்திற்கு வழியமைக்க உத்தேசித்துள்ளேன்.

பொத்துவிலில் இனமுரண்பாடுகளை இந்த மாவட்டத்திற்கு வெளியிருந்து வந்து ஏற்படுத்த யாருக்கும் இடமளிக்க முடியாது.

முகுது மகா விகாரையை மையப்படுத்தி முஸ்லிம் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த இடமளிக்க முடியாது.

முகுது மகா விகாரை தொல் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

அந்த புனிதமான இடத்தில் ஒரு வேலிக்கட்டையை உடைத்து முஷாரப்பின் ஆதரவாளர்கள் உடைத்ததாக முரண்பாடுகளை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சிப்பதற்கு இடமளிக்க முடியாது.

வினா: அரசுடன் இணைந்து மக்கள் சேவைசெய்யும் எண்ணம் உள்ளதா?
விடை: எமது கட்சியின் தலைவர் றிசாட்பதியுதீன் நல்லதொரு மனிதர். அவரை பிரதமர் மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால பிரதமர் ரணில் ஆகியோரெலலாம் அமைச்சராக்பயன்படுத்தினர். நல்ல செயற்றிறன் மிகுந்த அவரிடம் பல பில்லியன் நட்டத்திலியங்கிய ஹிங்குறான சீனிக்கூட்டுத்தாபனம் மற்றும் ச.தொ.சவை கொடுத்தார்கள் அவர் அதனை பொறுப்பெடுத்து லாபமீட்டும் துறையாகமாற்றினார். இந்த அரசாங்கம் அவர்மீது வீண் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிழைபிடிக்கமுயல்கிறது. எனவே அரசுடன் இணைவதென்பது காலம்தான் பதில்சொல்லும்.

வினர இறுதியாக எனன சொல்லவிளைகிறீர்கள்?
விடை: 3இனங்களையும் அரவணைத்து இனமதபேதமற்ற  தூய்மையான நேர்மையான அரசியல் செய்யவிரும்புகிறேன். மக்கள் தங்களின் அன்பையும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தந்தால சமுகமாற்றத்தை ஏற்படுத்தி சமாதானமாக வளமுடன் வாழலாம்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்



யுத்தத்தாலும் இன்னோரன்ன இனவன்மங்களாலும் சுனாமியாலும்
முற்றாகப்பாதிக்கப்பட்ட எனதினிய தமிழினத்திற்கு சமகாலதேவையாக இருப்பதுஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும்ஒரேயொரு தமிழ் வேட்பாளர் வெள்ளையன் வினோகாந்த் இவ்வாறு கூறுகிறார்.அம்பாறை மிஹிந்துபுரவில் நான்கு சகோதரர்களோடு 1982இல் பிறந்து 1990வன்செயலில் இடம்பெயர்ந்து காரைதீவில் நான்கு வருடங்கள் அகதிவாழ்க்கைவாழ்ந்து 1994இல் புதியவளத்தாப்பிட்டியில் குடியேறி வாழ்ந்துவரும்திரு.வினோகாந்த் அமைச்சர்களுடன் இணைந்து பல்லாண்டுகாலம் சேவை மற்றும்அபிவிருத்திச்செய்றபாடுகளில் ஈடுபட்டுவந்த ஓர் இளம் அரசியலாளர்.ஏழைகளுக்கு அளப்பரிய சேவையாற்றி மக்கள்மனங்களில் நீங்காஇடம்பிடித்த
முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச மற்றும் அவரது மகன்  முன்னாள்அமைச்சர் சஜித் பிரேமதாஸ வழியில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களுக்காகசேவைசெய்யப் புறப்பட்ட இளம்தலைவர்  வினோகாந்த். அவருக்கு ஆதரவளிப்பதன்மூலம் உங்களையும் உங்கள் பிரதேசத்தையும் வளப்படுத்திக்கொள்ளலாம் இவ்வாறுஒரு அங்கீகாரம் வழங்கியுள்ளார் அம்பாறைமாவட்டத்தின் மூத்தஅரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பி.தயாரத்னா.

ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து பிரிந்த சஜித் தலைமையிலான ஜக்கிய மக்கள்சக்தி கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ்வேட்பாளர் வெள்ளையன் வினோகாந்த்..அவருடன் ஆறு முஸ்லிம்வேட்பாளர்களும்மூன்று சிங்கள வேட்பாளர்களும் களத்தில் குதித்துள்ளனர்.மூன்று மொழிகளிலும் பாண்டியத்தியம்பெற்ற அனுபவம் வாய்ந்த இளம் வேட்பாளர்வெ.வினோகாந்த் எமது வாசகர்களுக்காக இந்தச் செவ்வியை வழங்கினார். அவருடனானசெவ்வி இதோ:

வினா: அரசியல்வாதிகள் படித்தவர்களாக இருக்கவேண்டும் என்று கூறப்படுகின்ற
இந்தகாலகட்டத்தில் தங்கள் கல்விப்பின்புலத்தை முதலில் கூறுங்கள்?
விடை: நான் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் பயின்றவன்.பின்பு கொழும்பு
பல்கலைக்கழகத்தில் ஊடகடிப்ளொமா பாடநெறியை பூர்த்திசெய்து திருகோணமலை
தொழினுட்பக்கல்லூரியில் என்சிரி.(சிவில்) பாடநெறியை முடித்தேன்.
அதன்பலனாக சூரியன் எவ்.எம். மற்றும் ருபவாஹினி சனல் ஜ  யிலும்
பணியாற்றக்கிடைத்தது.
வினா: மும்மொழி ஆற்றலுள்ள தங்களின் அரசியல் பிரவேசம் பற்றிக்கூறுங்கள்?

விடை: 2005இல் அமைச்சர்களின் சேவையில் சற்று உந்தப்பட்டேன்.
அம்hபாறையிலிருந்த பிரபல அமைச்சரின் வேண்டுகோளின்பேரில் 2011 மற்றும் 2015 தேர்தல்களில் உணர்வுபூர்வமாகச்செயற்பட்டேன். அதன்பலனாக விவசாயஅமைச்சிலும் பெற்றோலியவளத்துறை அமைச்சிலும் மாவட்ட இணைப்பாளராக
சேவையாற்றமுடிந்தது.
வினா: தங்கள் இதற்கு முன் மக்களுக்கு சேவையாற்றியிருந்தால் அது பற்றிக்கூறுங்கள்?
விடை: நான் முதலில் 'ஹபிற்றாற்' என்ற அரசசார்பற்ற நிறுவனத்தில்
சேவையாற்றினேன். வடக்கு கிழக்கில்  சுமார் 1000வீடுகளைக்
கட்டிக்கொடுக்கும் பணியிலீடுபட்டேன். எமது மாவட்டத்தில் தொடர்சேவைசெய்ய
ஆசைப்பட்டேன்.மேலும் அமைச்சருடன் இணைந்து ஆலயம் வீதி மைதானம் பாடசாலைஅபிவிருத்திக்கும் சமுர்த்தி பயனாளிகளை மும்மடங்காக்கி
அவர்களைத்தெரிவுசெய்து வழங்கியதில் பாரிய பங்கு எனக்குண்டு.
வினா: முன்அனுபவமுள்ள நீங்கள் தற்போது சஜித் அணியில் வந்ததன் காரணம் என்ன?
விடை: நான் இளமையிலிருந்து அமரர் பிரேமதாசவின் சேவையில் கவரப்பட்டேன்.
ஏழைகளின் தோழன். அவரது வீடமைப்புத்திட்டத்தின் மகத்துவம் வாய்ந்தது.
அவரது புதல்வன் தலைவர் சஜித்பிரேமதாச அதே பாணியில் சேவைசெய்துவருகிறார்.
கடந்த ஜனாதிபதித்தேர்தலில் 90வீத தமிழ்மக்கள் எமது தலைவர்
சஜித்பிரேமதாசவுக்கே வாக்களித்தனர். இன்றும் அம்மக்கள் சோர்ந்துபோகாமல்
தலைவர் சஜித்தின்மீது நம்பிக்கைவைத்து பிரதமராக அழகுபார்க்க
எண்ணுகின்றனர்.  அவர் என்னை அழைத்து தேர்தலில் நிற்குமாறு கேட்டதும்
நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. நான் எந்ததுறையில் ஆசைப்பட்டேனோஅந்ததுறையில் அதுவும் நான்விரும்பிய நேசிக்கும் தலைவன் சஜித் அழைத்ததைஒரு பாக்கியமாகக்கருதி இணக்கம்தெரிவித்தேன்.கேள்வி: தங்கள் ஜ.ம.சக்தி அணியில் 6முஸ்லிம் வேட்பாளர்களும்3சிங்களவேட்பாளர்களும் போட்டியிடுகின்றனரே இந்நிலையில் தங்களுக்கு வெற்றிகிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

விடை: நிச்சயமாக.எனது வெற்றி உறுதிசெய்யப்பட்ட வெற்றி.  .
முஸ்லிம்களைப்பொறுத்தவரை எமது கட்சிக்குள் ஆறுமுனைப்போட்டி மாவட்டத்தில்
28முனைப்போட்டி.எனவே வாக்குகள் பிரியும். சிங்களஇனத்திலும் இதேபாணி. எனவே
எனது தமிழ்மக்கள் 1லட்சம்வாக்காளர்களில் 30வீதம் எனக்களித்தாலே எனது
வெற்றி உறுதிப்படுத்தப்படும். எனக்கு எனது மக்களில் பூரணநம்பிக்கை
உள்ளது.
வினா: தாங்கள் தெரிவானால் எவ்வகையான வேலைத்திட்டத்தை செய்வீர்கள்?
விடை: அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேசசெயலகப்பிரிவுகளில் தமிழ்மக்கள்
செறிந்துவாழ்கிறார்கள். அங்கு குடிநீர்ப்பிரச்சினை காலாகாலமாக
இருந்துவருகிறது.யாரும் தீர்ப்பாரில்லை.. இதுவரை வந்த பாராளுமன்ற
உறுப்பினர்கள் யாரும் இப்பிரச்சினையை தீர்க்கவில்லை.
குறிப்பாக குண்டுமடு செல்வபுரம் தாண்டியடி கண்ணகிகிராமம் மண்டானை
காயத்திரிகிராமம் கோமாரி மல்லிகைத்தீவு மத்தியமுகாம் பெரியநீலாவணை போன்றபிரதேச தமிழ்மக்கள் வரட்சிக்காலத்தில் குடிநீரின்றி சொல்லொணாக் கஸ்டத்தைஅனுபவித்துவருகிறார்கள்.மல்லிகைத்தீவுக்கிராமத்தில் நிலவிய
குடிதண்ணீர்பிரச்சினையால் சிறுநீரகநோய் ஏற்பட்டு சிலர் அநியாயமாக
இறந்தனர். அத்தனை அனர்த்தம் நிகழ்ந்தும் இங்குள்ள தமிழ்எம்.பி. அங்கு
செல்லவில்லையென அம்மக்கள் அழுதனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் தரிசுநிலமாகவுள்ள 25ஆயிரம் ஏக்கர் காணிக்கு
சிறந்த நீர்ப்பாசனத்தை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளேன். அங்குள்ள
இளைஞர்யுவதிகளு பாற்பண்ணை புடவைத்தொழிற்சாலை அமைத்துக்கொடுக்கவும்திட்டமிட்டுள்ளேன். அதற்காக அமைச்சருடன் பேசிவிட்டேன்.
வினா: தேர்தல் நெருங்கிவிட்டது. இந்நிலையில் தலைவர் சஜித்பிரேமதாச ஆகதங்களின் அழைப்பை மட்டும் ஏற்று கடந்தவாரம் ஆலையடிவேம்பிற்கு
பிரசாரக்கூட்டத்திற்கு மட்டும் வந்ததாக அறிகிறோம்? அப்படியென்ன விசேசம்உங்களில்?
விடை: இது ஒரு பாக்கியம். நான் அழைப்பு விடுத்தேன். உரியவேளைக்கு
வந்தார். சிலர் தடுக்கநினைத்தனர். ஆனால் அவர் எனக்கதந்த முன்னுரிமை அது.அதனால்தான் அவரில் 100வீத நம்பி;க்கையுடன் செயற்படுகிறேன்.
வினா: அந்த வருகை பலனளித்ததா?
விடை: நிச்சயமாக. எமது தமிழ்மக்களின் கோரிக்கைகளை அழகாக சிங்களத்தில்எடுத்துரைத்தேன். அவரது பேச்சில் அனைத்திற்கும் சாதகமாக பதிலளித்துஉறுதிமொழிவழங்கினார். அவரை நம்பலாம். தமிழ்மக்களும் 100வீதம்நம்புகிறார்கள். அதன்காரணத்தினால்தான் ஜனாதிபதிதேர்தலில் அவருக்குதமிழ்மக்கள் 95வீத வாக்களித்தனர். இன்றும் அவரை பிரதமராக்க
முனைந்துள்ளனர்.
வினா: தாங்கள் காரைதீவில் அகதிவாழ்க்கை வாழ்ந்ததாக குறிப்பிட்டீர்கள்?
அந்த வாழ்க்கை எப்படி இருந்தது?
விடை: நல்ல கேள்வி. உண்மையில் வாழ்க்கை என்றால் என்ன என்பதை
உணர்வுபூர்வமாக அறியமுடிந்தது காரைதீவில்தான். கல்வியின் மகத்துவத்தையும்
அறிந்தது அங்கேதான்.அங்குள்ள மக்களின் வீரம் தீரம் கல்வி என்னை
வெகுவாகக்கவர்ந்தது.

வினா: தமிழ்க்கட்சிகளில் போட்டியிடாமல் தேசிய சிங்களக்கட்சியில்
போட்டியிடக்காரணம் என்ன?
விடை: தலையைச்சுற்றி மூக்கை தொடுவானேன்? தரகர் இல்லாமல்   நேரடியாகச்சேவைசெய்யக்கூடிய கட்சியில் இணைந்துதான் மக்களுக்கு துரிதசேவையைய்
செய்யமுடியும். சஜித் ஏழைகளின் தோழன் ஏளிமையின் மொத்தவடிவம். அவருடன்நேரடித்தொடர்பிலுள்ளவன் நான். நிலைமை அப்படியிருக்க தமிழ்க்கட்சிகளில்மக்கள் வெறுப்படைந்துள்ள நிலையில் நான அதில் கேட்டு பின்னர்பிரதமராகவிருக்கும் சஜித்திடம் கையேந்தவேண்டும்? அதற்காகவே நேரடியாகவேஅக்கட்சியில் கேட்கிறேன்.
வினா: தாங்கள் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்று அறியக்கூடியதாயுள்ளது.அது அரசியலுக்கு துணைபுரிகின்றதா?
விடை: அதுதான் எனது சிறப்பு. அரசியலில் நான் இன்று காலூன்றக்காரணமே அந்த
மொழியறிவே. அதுதான் அமைச்சர்கள் அருகில் பயமில்லாமல் அருகில் செல்லவாய்ப்பளித்தது. பலமேடைகளில் தலைவர் சஜித்தின் மொழிபெயர்ப்பாளராகசேவையாற்றியிருக்கிறேன்.
ஏழைமக்களுக்கு ஜனசவிய வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய பெருந்தலைவர்அமரர் பிரேமதாஸா. அவரொரு செயல்வீரன். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?எனவே அவருடைய மகன் சஜித் பிரேமதாசவும் அதேபாணியில் மக்களுக்கான
வீட்டுத்திட்டங்களை முன்னெடு;த்துவருகிறார்.அவருக்கு எனது மொழி
உதவுகிறது.
வினா: சில வேட்பாளர்கள் மக்களுக்கு சோட்டி சாறன் அரிசிசீனி காசு
எதையெல்லாமோ வழங்குகிறார்கள் என்று செய்திகள் அடிபடுகின்றன. தங்களின்நிலைப்பாடு என்ன?
விடை: வாக்கிற்காக பாய் கோழிக்குஞ்சி சாராயம் அரிசி பணம் போன்ற
வடிவங்களில் லஞ்சம் பெற்றால் பின்பு சேவையை எதிர்பார்க்கமுடியாது.
அவர்கள் அடுத்த ஜந்து வருடங்களின்பின்புதான் வருவார்கள். அவர்கள் லஞ்சம்கேட்பார்கள். அதனைத்தவிர்க்கமுடியாது.

எனவே வாக்கிற்காக லஞ்சம் வழங்குவதை நிராகரிக்கிறேன்.
வினா: தமிழ்மக்கள் சார்பில்  த.தே.கூட்டமைப்பு மற்றும் கருணா அணியினர்
களத்திலிறங்கியுள்ள திகாமடுல்ல தேர்தல் களத்தில் உங்களால்
தமிழ்வாக்குகளைப் பெறமுடியுமா?
விடை: கடந்தகால செயற்பாடுகளால் அவர்கள்மீது வெறுப்பலைகள் பெருமளிவல்உள்ளது. அவர்களோடு ஒப்பிட நான்விரும்பவில்லை. எனது களம் வேறு, எனக்கென்று
சஜித் அலை வாக்குவங்கிஉள்ளது.நிச்சயம் நான் வெற்றிபெறுவேன்.
வினா: அரசின் பல அபிவிருத்தித்திட்டங்கள் தமிழ்மக்களுக்குக்
கிடைக்கவில்லையென குற்றம் சாட்டப்படுகிறதே? அதுபற்றிக்கூற முடியுமா?
விடை: உண்மை. கடந்தகாலங்களில் பலஇனவாதிகளால்  முன்னெடுக்கப்பட்டுவந்த
இனத்துவேச அரசியலின் வெளிப்பாடுகளே அவைக்குக்காரணம். அதற்கு தமிழ்அரசியல் போக்கும் மறு காரணமெனலாம். எனவேதான் அளக்கிறவன் இருக்கும்ஆளுங்கட்சியில் இணைந்தால் அனைத்தும் சுலபமாகும்.
வினா: அம்பாறை மாவட்டத்தில் நீங்கள் எம்.பியானால் உங்கள் கட்சிசார்ந்த
மாவட்ட அணுகுமுறைகள் எவ்வாறமையும் எனக்கருதுகிறீர்கள்?
விடை: வெல்வது உறுதியாகிவிட்டது. திருக்கோவில் ஆலையடிவேம்பு பகுதியில்எனது அலுவலகத்தை அமைத்து 24மணிநேரமும் மக்கள்சேவை செய்யதிட்டமிட்டுள்ளேன். மேலும் மக்கள் என்னைத்தேடி வரவேண்டிய அவசியமில்லை.நான் மக்களைத்தேடி ஊர்ஊராகச்செல்வேன்.

வினா: இறுதியாக மக்களுக்காக என்ன சொல்லவிரும்புகிறீர்கள்?
விடை: நான் மக்களுடன்  இணைந்து பயணித்துவந்திருக்கிறேன். என்றும்
பயணிப்பேன். தேர்தலுக்கு மட்டும் வந்துவிட்டு பின்னர் காணாமல்போகும்
பிறப்பு இது இல்லை. வெறும் நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளை தந்து
ஏமாற்றுபவன் நானல்ல. செய்வதையே சொல்வேன். சொல்வதைச் செய்வேன். அது எனதுகொள்கை. எனவே இன்றும் என்றும் நாம் அனைவரும் மனதார விரும்பும்தொலைபேசிச்;சின்னத்திற்கு முதலில் வாக்களித்து பின்னர் எனது 08ஆம்இலக்கத்திற்கு வாக்களித்தால் நம்மனைவரது வாழ்வும் வளம்பெறும்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்

தேசிய காங்கிரஸும் அதனுடைய தலைமையும் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்குதலைமைத்துவத்தை வழங்கி, எதிர்காலத்தில் அமையப் போகும் பொதுஜன பெரமுன ஆட்சியில் இணைந்து செயற்படும் பங்காளிக் கட்சியாக அமையப் போகின்றது' என சட்டம் ஒழுங்குஅமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டவேட்பாளருமான ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.

நேர்காணல்: ஏ.மொஹமட் பாயிஸ்

கேள்வி: திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில்மக்களின் தெரிவு எப்படியிருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பதில்: சிங்கள மக்கள் மத்தியில் தேசிய ரீதியாக பொதுஜன பெரமுன பலம் வாய்ந்தகட்சியாக இருப்பது போல் முஸ்லிம்கள் மத்தியில் சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டபலம் வாய்ந்த கட்சியாக தேசிய காங்கிரஸ் காணப்படுகின்றது. மறுபுறத்தில்எதிர்க்கட்சியான ஐ.தே.க இரண்டாகப் பிளவுபட்டு மக்கள் மத்தியில் நன்மதிப்பைஇழந்த கட்சிகளாக அவை காணப்படுகின்றன. தேசிய ரீதியான நிலைமை இவ்வாறுகாணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற முஸ்லிம் கட்சிகளைப்பொறுத்தவரை ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸைச்சேர்ந்த வேட்பாளர்கள் மத்தியில் போட்டியும், ஆதரவாளர்கள் மத்தயில் குழப்பமும்காணப்படுகின்றன. அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அதனுடைய
தலைமை தொடர்பிலும் பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. இதனால் இந்தக்கட்சிகள் மக்களிடத்தில் செல்வாக்கிழந்து காணப்படுகின்றன.

முஸ்லிம்கள் மத்தியில் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களின்எதிர்பார்ப்புகளை எதிர்காலத்தில் நிறைவேற்றக் கூடிய கட்சியாக தேசிய காங்கிரஸ்காணப்படுகின்றது. அம்பாறை மக்களின் தெரிவாக இந்தக் கட்சி இருக்கின்றது. இந்தத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் 3 ஆசனங்களைப் பெறுவது மக்களால்உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை மக்களின் ஆதரவை வைத்து தெரிந்து கொள்ளக் கூடியதாகஉள்ளது.

கேள்வி: பொதுத் தேர்தலில் அரசியல் பிரசாரங்கள் பலவாறாக முன்வைக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் உங்களுடைய கட்சி நல்லிணக்க அரசியல் தொடர்பில் எவ்வாறானநிலைப்பாட்டை முன்னெடுத்து வருகின்றது?

பதில்: இனவாத போலி அரசியல் பிரசாரக் கருத்துகள் மூலம் இனங்களுக்கிடையில்விரிசலை முஸ்லிம் பெயர் தாங்கிய இரு கட்சிகளும் அம்பாறையில் ஏற்படுத்தியுள்ளன.அந்த இடைவெளியை இல்லாமல் செய்து இன செளஜன்யத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு
எமது தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இருக்கின்றது. அந்த அடிப்படையில்தான் எமதுதேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தேசிய ரீதியில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திநாட்டிலுள்ள மூவினங்களும் ஒன்றித்து வாழக் கூடிய ஒரு சமூகம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை முதலாவது இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது. குறிப்பாக
முஸ்லிம் சமூகம் இழந்துள்ள அந்த நற்பெயரை மீண்டும் கொண்டு வருவதுடன்,முஸ்லிம்களும் தேசத்திற்கு பங்களிப்புச் செய்யக் கூடியவர்கள் என்ற நம்பிக்கையைஏற்படுத்துவதனுடாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அது ஒரு சவாலாகவும்
இருக்கின்றது. தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்கத்துக்குஎதிராகவும், ஏனைய பகுதியினருக்கு எதிராகவும் சில கட்சிகள் இனவாதக் கருத்துகளைமுன்வைத்து அவர்களுடைய இலக்குகளை அடைய விரும்புகின்றன. அம்பாறை மாவட்டம் மூவின
மக்களும் செறிந்து வாழ்கின்ற முன்னுதாரணமான மாவட்டம். இந்த
மாவட்டத்திலிருந்துதான் இனசௌஜன்யம் வளர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றோம். அம்பாறை மாவட்ட மக்கள் தெளிவாகஇருக்கின்றார்கள். ஆளும் கட்சியோடு இணைந்து செல்லும் ஒரு கட்சியான தேசியகாங்கிரஸை ஆதரிப்பதற்கு மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.

கேள்வி: நீங்கள் ஆளும் கட்சியோடு இணைந்த கட்சியாக இருக்கும் நிலையில், அம்பாறைமாவட்டத்தில் இந்த இரண்டு கட்சியும் தனித்துப் போட்டியிடுவதற்கான காரணம் என்ன?

பதில்: ஆரம்பத்தில் நாங்களும் கூட பொதுஜன பெரமுனவில்தான் போட்டியிடுவதாகஇருந்தது. இந்த மாவட்டத்தில் 3 பாராளுமன்ற உறுப்பினர்களை  பெறுவதற்கானஉரித்தும் தகுதியும் இருந்தன. ஆனால் அங்கு ஒரு உரிமை மறுப்பு இடம்பெற்றதால்தேசிய காங்கிரஸ் தனியாக போட்டியிடுவதற்கு தீர்மானித்தது. தேசிய காங்கிரஸ்
மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையில் அவர்கள் தனித்தும் கேட்கலாம் அல்லதுசேர்ந்தும் கேட்கலாம் என்ற உடன்பாடு காணப்படுகின்றது. அதனால்தான் நாம்தனித்துக் கேட்கின்றோம். தனியாகக் கேட்டாலும் கூட நாம் அரசின் பங்காளிக்
கட்சியாகத்தான் இருக்கின்றோம். சமூகத்தின் உரிமைகள், தேவைகள் சம்பந்தமாகமிகவும் ஆணித்தரமாக அதனைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையில்தான் தனித்தும்கேட்கின்றோம். தனித்துக் கேட்கும் சந்தர்ப்பத்தில் எமது மக்களின் தேவைகள்சம்பந்தமான கோரிக்கைகளை முன்வைத்து ஆளும் கட்சியோடு இணையவும் முடியும்.

ஆனால் தற்போது அந்தக் கட்சியில் அம்பாறை மாவட்டத்தில் இரு முஸ்லிம்களைப் போடவேண்டும் என்பததற்காக போட்டிருக்கின்றார்கள். ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சியான EPDP வடக்கில் தனியாக கேட்பது போல் அம்பாறையில் தேசியாக காங்கிரஸ்தனியாக போட்டியிடுகின்றது. எதிர்காலத்தில் அமையப் போகும் பொதுஜன பெரமுன
ஆட்சியில் EPDP, CWC, NC போன்றன முக்கிய பங்காளிக் கட்சிகளாக இருக்கப்போகின்றன.

கேள்வி: கல்முனை தொகுதியில் உங்களுடைய அரசியல் பிரவேசம் மூலம் என்ன மாற்றத்தை
ஏற்படுத்தவுள்ளீர்கள்?

பதில்: கல்முனை பிரதேசம் கடந்த 20 வருடங்களாக அபிவிருத்தியிலே பின்தங்கிக்காணப்படுகின்றது. இளைஞர் தொழில்வாய்ப்புக்கள், மீன்பிடி, விவசாயம், வர்த்தகம்,அரச துறை என எல்லா துறைகளைச் சார்ந்த பிரிவுகளிலும் பின்னடைவுகள்காணப்படுகின்றன. கல்முனையில் மாற்றங்களை ஏற்படுத்த எமது தேர்தல்
விஞ்ஞாபனத்தில் பல விடயங்களை முன்வைத்திருக்கின்றோம். மறைந்த தலைவர் மர்ஹும்எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களால் முன்மொழியப்பட்ட கல்முனை நகர அபிவிருத்திதிட்டத்தை சமகால பிரச்சினைகளை உள்வாங்கி நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும்.மர்ஹும் அஷ்ரஃப்   அந்தக் காலத்தில் கல்முனையைஅபிவிருத்தி செய்வதற்கான விடயங்களைக் கூறியிருக்கிறார். அந்தத் திட்டத்தின்அடிப்படையில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனரீதியான முரண்பாடுகள் இல்லாமல்
சிறந்ததொரு நகர அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.அதேபோன்றுகல்முனையில் புரையோடிப் போயுள்ள பிரச்சினையைப் பிற்சந்ததிக்கும் கொண்டுசெல்லாமல் கல்முனை பிரதேசத்தை நான்கு சபைகளில் மீதமான சபைகளான கல்முனை மாநகரசபை, தமிழ் மக்களுக்கான நகர சபை மற்றும் மருதமுனையை அடிப்படையாகக் கொண்டசபையாகப் பிரித்து எதிர்வருகின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர்தீர்வு காணுதலும், சாய்ந்தமருதுக்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியைஉறுதிப்படுத்தி சபையை ஸ்தாபிப்பதற்கான கட்டுமான, ஆளணி ஏற்பாடுகளைச் செய்வதும்எமது திட்டமாகும்.

கல்முனை தொகுதிலுள்ள பிரதேசங்கள் தங்களுடைய உள்ளுராட்சி அதிகாரம், அரசியல்பிரதிநிதித்துவங்களை எதிர்பார்க்கின்றன. அதனடிப்படையில் அவர்களுக்கான அரசியல்
தலைமத்துவங்களை வழங்கி எதிர்காலத்தில் இந்தப் பிரதேசம் சிறந்த முறையிலேஅபிவிருத்தியை நோக்கிய ஒரு பயணத்தில் இணைய வேண்டும் என்ற அடிப்படையில்
திட்டமிட்டு வருகின்றோம்.