(திருக்கோவில் எஸ்.கார்த்திகேசு)
பெண்களின் அரசியல் பிரவேசம் காலத்தின் தேவை,கலாசாரம் ஓரு தடையல்ல வீட்டுக்குள் முடங்கியிருப்பது மடமை.
-நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் வஸிறா நூர் மொஹமட்டுடனான நேர்காணல் தெரிவிப்பு-
அம்பாறைமாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் முதலாம் கிராமசேவையாளர் பிரிவில் தனதுபிரிவுசிறார்களின் கல்விவளர்ச்சிக்குஉதவும் வகையில் சொந்தகாணியில் முன்பள்ளி ஒன்றினை அமைத்து அதனூடாககற்பித்தல் பணியினை ஆரம்பித்துகல்விப் பணியுடன் சமுகப் பணியினையும் முன்னெடுத்துவந்தநிலையில் தேசியப் பட்டியல் ஊடாகநிந்தவூர் பிரதேசசபையின் உறுப்பினராகதேசியமக்கள் காங்கிரஸ் கட்சியின் ஊடாகநியமிக்கப்பட்டுள்ளநிந்தவூர் பிரதேச சபை உறுப்பினரானதிருமதி ஹஜியாணிவசீரா நூர் மொஹமட் அவர்களுடனான சமூகஅரசியல் பயணங்கள் தொடர்பான நேர்காணல்.
உங்கள் குடும்பபின்னணிகள் பற்றும் கூறுங்கள்
நான் நிந்தவூர் பிரதேசத்தில் 1967ஆம் ஆண்டுமுகமது அலியார் ஆதம்பாவாசெய்னன்பு தம்பதிகளுக்கு ஏழாவது மகளாவேன். எனதுஆரம்பகல்வியைநிந்தவூர் அல் கசாலியாவித்தியாலயம் (தோட்டத்துப் பாடசாலை) இடைநிலைக் கல்வியை நிந்தவூர் அல் அஷ்ரப் தேசியப் மத்திய கல்லூரியிலும் தரம் 12 வரை பயின்று இருந்தேன். தொடர்ந்துஎனதுகல்வினைதொடரமுடியாதுவறுமையின் காரணமாககல்வியை இடைநிறுத்திவிட்டு 17வயதில் வெளிநாட்டுக்கு தொழில் நிமிர்த்தம் சென்று இருந்தேன்.
நான் கல்வியை தொடர முடியாத நிலமையைக் கண்டு மனம் வேதனை அடைந்த மனதுடன் தான் வெளிநாடுசென்று இருந்தேன் இதன் காரணமாகநான் வறியமாணவர்களுக்கு கல்விகற்பதற்கு உதவி புரியவேண்டும் என்ற மனஆதங்கத்தோடு 1991ஆம் ஆண்டு எனது சொந்த காணியில் முன்பள்ளி பாடசாலை ஒன்றினை அமைத்து கல்விச் சேவையை மேற்கொண்டுவருகின்றசந்தர்ப்பத்தில் 1994ஆம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் நான் எனது முன்பள்ளிஆசிரியர் பணியை நிறுத்திவிட்டு குடும்பபணிகளில் வீட்டில் இருந்தேன். பின்னர் எனது கணவர் 2012ம் ஆண்டு மரணித்ததைத் தொடர்ந்து 2016 ஆண்டுமுதல் மீண்டும் சுவாட் நிறுவனத்தின் ஊடாக சமூகப் பணிகளில் என்னைமுழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருந்தவேளையில் இன்று அரசியலிலும் எனது பணியை முன்னெடுக்க இறைவன் நாடியுள்ளமையும் மகிழ்ச்சியே.
உங்களுடையசமூகஅரசியல் பிரவேசத்தில் குடும்ப உறவுகளின் ஆதரவுகள் எவ்வாறு உள்ளது?
நான் திருமணமானபின்னர் கணவர் மற்றும் குடும்பஉறவுகளின் ஊடாகஎனது முன்பள்ளிகல்விச் சேவைக்கு ஆதரவுகள் கிடைக்கப்பெற்று இருந்தன. ஆனால் அந்தகாலத்தில் நான் அரசியலில் ஈடுபடவில்லை அந்தவிரும்பமும் என்னிடம் இருக்கவில்லை. 2016ஆம் ஆண்டு சுவாட் நிறுவனத்தில் இணைந்து கொண்டதைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் பேணும் வேலைத்திட்டத்தின் கீழ் எனக்கு பணிசெய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் காரணமாக நான் சமூகத்தில் அறிமுகமாகி இருந்தேன். இதனைத் கவனத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிதலைமைப் பீடம் பெண் பிரநிநிதித்துவம் உள்வாங்கப்படவேண்டும் என்றநிலையில் நிந்தவூர் பிரதேசசபைக்கு நான் தேசியப்பட்டியல் உறுப்பினராக இரண்டாம் வட்டாரத்தில் இருந்து நியமிக்கப்பட்டு இருந்தேன்.
உங்கள் சமூகசேவைகள் பற்றி கூறமுடியுமா?
நான் எனது உயர்தரக் கல்வியை முதலாம் ஆண்டு பயின்று கொண்டு இருந்த நிலையில் எனது குடும்ப வறுமை என்னை கல்வியைதொடரவிடாது இந்த இளம் வயதில் வெளிநாடுசென்று இருந்தேன். இது எனது மனதில் வேதனையாக இருந்ததுடன் என்னால் கல்வி கற்க முடியாது போனதைப் போன்று வறுமை கல்விக்குதடையாக இருக்ககூடாது அதற்காக என்னால் முடிந்தளவுகல்விப் பணிக்கு உதவவேண்டும் எனசிந்தித்தேன் அதன் முதற்படியாக வெளிநாடு இருந்துவந்து 1991ஆம் ஆண்டுஆரம்பித்து. நிந்தவூர் முதலாம் பிரிவில் சிறார்களுக்கான முன்பள்ளிக் கல்வியினை இலாபநோக்கமன்றி கற்பித்துவந்தேன். இதுதான் எனதுசமூகப் பணியின் ஆரம்பம் ஆகும்.
இந்நிலையில் எனது கணவரின் மரணத்தை தொடர்ந்தும் குடும்ப பொறுப்புக்கள் குறைந்த நிலையில் எனது தனிமை என்னை மீண்டும் சமூகசேவைகளில் முழு நேரமாகசெயற்படத் இறைவன் நாடியதன் காரணமாக நான் தற்போதும் அரசியல் ஊடாக சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றறேன். எனது சேவைகள் பெரும்பாலும் கல்வியை ஊக்குவிப்பதும் பெண்களை இலக்காகக் கொண்டே பொருளாதாரமேம்பாடுமற்றும் பெண்களுக்குஎதிரானகுடும்பவன்முறைகள் இடம்பெறாதுதடுத்தல் ஆலோசனைகள் வழங்குதல் போன்றபணிகளைமுன்னெடுத்துவருகின்றேன்.
நீங்கள் எவ்வாறுஅரசியலுக்குள் வந்தீர்கள்?
நான் அரசியலில் ஈடுபடும் சிந்தனை இருக்கவில்லை. ஆரசியலை நோக்காக் கொண்டுசமூகம் சார்ந்தபணிகளையும் முன்னெடுத்து இருந்ததும் இல்லை.இலங்கை அரசியலில் பெண்களின் பங்குபற்றுதல் மிகமிககுறைவாக இருந்துவருகின்றநிலையில் அரசினால் கட்டாயம் பெண்களின் பிரநிதித்தவம் 25வீதம் உள்வாங்கப்படவேண்டும் என்றநிலையப்பாடுஅரசியல் கட்சிகளுக்கு இருந்தன.இந்நிலையில் என்னைநிந்தவூர் இரண்டாம் வட்டாத்தில் இருந்துஅகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சிதலைமைகள் தேசியப்பட்டியல் உறுப்பினராக 2018ஆண்டு தெரிவுசெய்து இருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்துநான் நிந்தவூர் பிரதேசசபையின் உறுப்பினராக செயற்பட்டுவருவதுடன் இங்குவந்தபின்னர் தான்; பெண்களின் அரசியல் தேவைப்பாட்டினை புரிந்து கொண்டேன் பிரதேசத்தில் முன்மாதிரியான பெண்னாக எனது சமூகபணிகளுடன் அரசியல் பயணத்தை முன்னெடுத்துவருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். எனது இந்தசமூகஅரசியல் பயணத்தில் பெண்களின் பங்கும் மிக காத்திரமானதாக அமைந்திருக்கின்றமை விசேடமாக கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.
நீங்கள் மேற்கொண்டசமூகமற்றும் அரசியல் பணிகள் பற்றி கூறமுடியுமா?
நான் ஆரம்பத்தில் எனது சிந்தனை கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்து கல்விகற்பதற்கு வசதியற்றமாணவர்களுக்கான முடிந்தளவு உதவிகள் செய்யவேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தன. அதன்பொருட்டு முன்பள்ளிபாடசாலையை ஆரம்பித்து பாலர்களுக்கு கல்வியை கற்பித்து கொடுத்திருந்தேன். அதனைத் தொடர்ந்துசுவாட் நிறுவனத்தின் இணைந்து மகளீர் சங்கங்கள் ஆகியவற்றின் ஊடாகபல்வேறு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுத்து இருந்தேன். முதியோர்களுக்கான நலன்புரி பணிகளுக்கும் உதவிகள் மேற்கொண்டு இருந்தேன். தற்போது பிரதேச சபையின் நிதி உதவியுடன் வாழ்வாதார உதவிகள் வழங்கி பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதற்காக உந்துசக்தியாகவும் நான் செயற்பட்டுவருகின்றேன்.
உங்கள் எதிர்கால இலக்கு இலட்சியங்கள் பற்றி கூற முடியுமா?
முஸ்லிம் பெண்கள் அரசியிலில் ஈடுபடுவது சமூகநெறி முறைகளுக்கு முரணான செயற்பாடுகள் என பலபெண்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இது ஒரு தவறானபார்வையாகும். முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது எனயாரும் கூறவில்லை. ஆனால் முஸ்லிம் கலாசார நெறிமுறைகளைப் பின்பற்றி நேர்மையாக சமூகமாற்றத்தினைஏற்படுத்தும் வகையில் பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்
பெண்கள் தங்களின் பால் நிலைசமத்துவம் நிலையில் சமூக அரசியல் பொருளாதார நிருவாக ரீதியாக ஒருநிலையான இடத்தினைஉருவாக்கிக் கொள்ள முன்வரவேண்டும்.நான் மட்டுமன்றி எனது பிரதேச பெண்கள் உரிமைரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வலுப்பெற்று பெண்களுக்குள் மறைந்து இருக்கும் திறமைகள் ஆற்றல்கள் ஒருவட்டத்திற்குள் முடங்கி இருக்காது அவைகள் வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்பதே எனது இலக்காக இருக்கிறது. இதனை எதிர்வரும் காலங்களில் ஒருஅமைப்புரீதியாக முன்னெடுக்கவும் நான் உத்தேசித்து இருக்கின்றேன்.

Post A Comment:
0 comments so far,add yours