(த.தவக்குமார்)
மட்டக்களப்பு வாவியில் படுவான்கரையையும்,எழுவான்கரையையும் இணைப்பதற்காக 5 ஓடத்துறைகள் இருந்தன சோ.உ.எதிர்மனசிங்கம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் முதலாவதாக பட்டிருப்பு துறைக்கும் பி.இ.ராஜன்செல்வநாயகம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் வலையறவு துறைக்கும் பாலம் அமைக்கப்பட்டது. மூன்றாவதாக மகிஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது மண்முனைதுறைக்கும் பாலம் அமைக்கப்பட்டது.
இந்தப்பிரதேசத்திலே உள்ள துறைகளில் மிகவும் ஆளமானதும்,நீளமான துறையாகவும் இருப்பது மண்டூர் குறுமன்வெளித் துறையாகும் இத்துறையானது ஆயிரம் மீற்றர் நீளம் கொண்டதாகும்.இற்ரைக்கு பல ஙாற்றாண்டு;களாக இந்த மண்டூர்,குருமன்வெளி துறையினூடாக எழுவான்கரையிலிருந்தும்,படுவான் கரையிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் பயணயங்களை மேற்பொண்டிருந்தாhர்கள். ஆனால் அந்தக்காலப்பகுதியில் ஓடங்கள் மற்றும் வள்ளங்களைப் பயன்படுத்தி பயணங்களை மேற்கொள்வது வழமை.
பயணங்களை மேற்கொள்ளும் போது வாவியில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும்; அதிகமான சுமையினால் நடு வாவியில் மூழ்கடிக்கப்படுவதுமுண்டு.
கடந்த 1993ஆம் ஆண்டு தங்களது தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் நோக்கில் தந்தை ஒருவர் மட்டக்ளப்பில் கல்விகற்று வந்த தனது மகனை இந்த வாவியுடான வள்ளத்தில் அழைத்து வந்த போது வாவியில் தீடிர் என்று ஏற்பட்ட அதிகமான காற்றினால் அந்த வள்ளம் நீரில் மூழ்கியது அதில் தந்தையும் மகனும் அந்த இ;டத்திலேயே மரணிக்க நேர்ந்தது.
பின்னர் இந்த ஓடத்துறையினூடாக பயணிக்கும் மக்களின் நன்மைகருதி இயந்திரப்படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டது. இன்று வரை அதே இயந்திரப்படகுச்சேவையே செயற்பாட்டில் இருந்து வருகின்றது.
ஆனால் இந்த இயந்திர படகுச்சேவை போக்குவரத்தில் ஈடுபடும் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு இல்லை என்பது உன்மை. காரணம் பருவம மழை காலம் வந்தால் வெல்லாவெளி ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு விடும் அதேபோன்று கிட்டங்கி வீதி வழியான போக்கு வரத்தும் முற்றாக தடைப்பட்டு விடும்.மக்களின் போக்குவரத்திற்கு ஒரே ஒரு விழிப்பாதையே இந்த வாவியூடான பயணமே அப்படி இப்பிரதேசத்தில் வாழ்கின்ற பொதுமக்களின் பயணங்கள் இப்படியே செல்கின்றன.
இந்த நாட்டிலே பல அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து செல்கின்றது.மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அதிகமான அக்கறை காட்டுவதில் பின்தள்ளிச் செல்கின்றார்கள் இப்படியான பாதிப்படைந்த பிரதேசங்களில் உள்ள மக்களின் மிக முக்கியமான தேவைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விடயம்.
இந்ந பிரதேசத்திலே உள்ள மக்களின் கனவினை நனவாக்கும் வகையில கடந்த 2017ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 14ம் திகதி தேசிய நல்லிணக்க அமைச்சின் மூலம் 140 கோடி ரூபா செலவில் மட்டக்களப்பு வாவிக்கு குறிப்பாக மண்டூர்,குருமன்வெளி வாவிக்கு குறுக்கான பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் 13ம் திகதி இரவோடு இரவாக பரவியது ஒரு செய்தி ஒரு சில அரசியல் வாதிகள் தெரிவித்திருந்ததாக 140 கோடி ரூபா நிதியினை ஒரு வாவியில் கொட்டுவதன் மூலம் எவ்விதமான அபிவிருத்திகளும் நடைபெறாது இந்த நிதியினை மக்களின் வாழ்வாதார உதவிகளுக்கு கொடுப்பது நல்லது என்பதே. இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்டியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின்; முயற்சியினால் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களின் கரங்களினால் அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் இன்று வருடங்கள் இரண்டைக்கடந்தும் எவ்விதமான வேலைத்திட்டங்களும்; நடைபெறவில்லை. ஒதுக்கீடு செய்யப்பட்ட இத்திட்டத்திற்கான நிதிக்கு என்னவானது என்பதே இப்பிரதேச வாசிகளின் வினாவாகும்
இன்றும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் பொதுமக்கள்,பாடசாலை மாணவர்கள்,வியாபாரிகள்,அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பிரயாணங்களை இந்த இயந்திர படகினூடாக மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை இந்த இயந்திரப்படகினூடாக பயணிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மண்டூர் மற்றும் குருமனிவெளி ஆகிய இரு இடங்களில் இயந்திரப்படகு தரித்து நிற்கும் தரிப்பிடத்தை விட்டு குன்றும் குழியுமாக சீரற்ற கற்கள் நிறைந்த தரிப்பிடத்தில் இந்த இயந்திரப்படகு தரித்து நிற்பதால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை ஏற்றி இறக்குவதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் பிரதேச வாசிகள் சிரமமில்லாமல் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராமமக்கள் கோருகின்றனர்.




Post A Comment:
0 comments so far,add yours